உள்ளம் உருகுதய்யா... ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் 2வது பாடல் வெளியீடு!

 
Etharkkum-Thunindhavan

சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் 2வது பாடல் வெளியாகி உள்ளது.

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4-ம் தேதி வெளியாகிறது.

முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், ராதிகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள, இப்படத்தில் வில்லனாக வினய் நடித்துள்ளார்.

இப்படத்தின், முதல் பாடலான ‘வாடா தம்பி’ கடந்த டிசம்பர் 16-ம் தேதி வெளியான நிலையில், நேற்று மாலை ‘உள்ளம் உருகுதய்யா உன்னை உத்து உத்துப் பார்க்கயிலே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார்.

‘உள்ளம் உருகுதய்யா முருகா’ என்ற பாடலையே ரீமிக்ஸ் செய்தது போல் இருக்கும் இப்பாடலை  வந்தனா ஸ்ரீனிவாசன், பிருந்தா மாணிக்கவாசகன் போன்றோர் பாடியுள்ளனர். நேற்று மாலை வெளியான இப்பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.


 


 

From around the web