இனி அமெரிக்கவில் சீன நிறுவனங்களுக்குத் தடை!அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றம்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பலவும் சீனாவின் மீது கடும் குற்றச்சாட்டை எழுப்பி வருகிறது. இந்நிலையில் சீனாவில் ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கண்டிக்கும் வகையிலும் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்காகவும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைச் திருத்தி சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. சீனாவின் இந்த செயலைக் கண்டித்து ஹாங்காங்கின் தன்னாட்சியைப் பறிக்கும் செயல் எனக் கூறி அமெரிக்காவும் பிரிட்டனும் கண்டனம் தெரிவித்துள்ளன. உலக நாடுகள் பலவும் சீனாவின் இந்த மெத்தனப் போக்கை கண்டித்து
 

இனி அமெரிக்கவில் சீன நிறுவனங்களுக்குத் தடை!அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றம்!சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பலவும் சீனாவின் மீது கடும் குற்றச்சாட்டை எழுப்பி வருகிறது.

இந்நிலையில் சீனாவில் ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கண்டிக்கும் வகையிலும் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்காகவும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைச் திருத்தி சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. சீனாவின் இந்த செயலைக் கண்டித்து ஹாங்காங்கின் தன்னாட்சியைப் பறிக்கும் செயல் எனக் கூறி அமெரிக்காவும் பிரிட்டனும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உலக நாடுகள் பலவும் சீனாவின் இந்த மெத்தனப் போக்கை கண்டித்து வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் சட்ட மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஏற்கெனவே அமெரிக்காவுடன் வணிகம் செய்வதற்கு ஹாங்காங்குக்கு வழங்கப்பட்ட அனைத்து சிறப்பு சலுகைகளும் செல்லாது என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web