காஷ்மீரில் மூக்கை நுழைக்கும் சீனா!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆக. 5 அன்று ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போல லடாக் பகுதியில் சீனா வாலாட்ட தொடங்கியது. அண்டை வீட்டுக்காரர்களிடையே வாக்குவாதம் நேர்ந்தால் ஊடே நுழையும் கட்டப்பஞ்சாயத்து போக்கிரி போல , இந்திய விவகாரங்களில் சீன தலையிட ஆரம்பித்துள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்தது சட்டவிரோதம் செல்லாது என சீன பாகிஸ்தான் மீடியாவுக்கு பேட்டி கொடுத்தது. காஷ்மீர் பகுதியில் நடப்பவைகளை சீனா
 

காஷ்மீரில் மூக்கை நுழைக்கும் சீனா!ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆக. 5  அன்று ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போல லடாக் பகுதியில் சீனா வாலாட்ட தொடங்கியது.

அண்டை வீட்டுக்காரர்களிடையே வாக்குவாதம் நேர்ந்தால் ஊடே நுழையும் கட்டப்பஞ்சாயத்து போக்கிரி போல , இந்திய விவகாரங்களில் சீன தலையிட ஆரம்பித்துள்ளது.  சட்டப்பிரிவு 370 ரத்து  செய்தது சட்டவிரோதம்  செல்லாது என சீன  பாகிஸ்தான் மீடியாவுக்கு பேட்டி கொடுத்தது.

காஷ்மீர் பகுதியில் நடப்பவைகளை சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறதாம். லடாக் வரைபடத்தில்   சீனா ஆக்கிரமித்துள்ள அக்ஷய் சின் பகுதியை சேர்த்து இந்திய வெளியிட்டது, யூனியன் பிரதேசம் ஆனதால் சர்வதேச எல்லையில் மாற்றமோ  அக்ஷய் சின் மீது உரிமையையோ விட்டுக்கொடுக்கமுடியாது என இந்திய அறிவித்தது.

பேச்சுவார்த்தை மூலம் பாகிஸ்தானுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் வாங் வெவ்பின்  இந்தியாவுக்கு புத்திமதி கூறுகிறார். 1963  லிருந்து  இந்திய எல்லையில் சீன ஊடுருருவ முயன்றுகொண்டே இருக்கிறது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி பிளந்துபோனதற்கு சீனா காரணம். இந்திய விவகாரங்களில் சீன தலையிடுவதை இந்திய கம்யூனிஸ்டுகள் பகிரங்கமாக எதிர்க்க வேண்டும்.

காஷ்மீர் பிரச்னை தணியாமல் பார்த்துக்கொள்வதில் சீனாவுக்கும் பங்கு உண்டோ என ஐயம் எழுகிறது.  பிரதமர்கள் நேருஜி  லால் பகதூர் சாஸ்திரி பேச்சுவார்த்தை நடத்திய பின்னும் சீனா திருந்தவில்லை.  இனி விஷமம் செய்தால் சீன அதிகவிலை கொடுக்க வேண்டி வரும் என இந்திய அரசு கடுமையாக எச்சரிக்கை வேண்டும். சீனா விஷயத்தில் காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகளை அழைத்து பேசி ஆதரவை பிரதமர் மோடி பெறவேண்டும்.

– வி.எச்.கே. ஹரிஹரன் 

A1TamilNews.com

From around the web