ஐபிஎல் 2019: டோணி அசத்தல்… கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2019 தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கி ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் 28 ரன்கள், ஜோஸ் பட்லர் 23, ஷ்ரேயாஸ் கோபால் 19 ரன்கள் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், ஷர்துல்
 

ஐபிஎல் 2019: டோணி அசத்தல்… கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2019 தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கி ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் 28 ரன்கள், ஜோஸ் பட்லர் 23, ஷ்ரேயாஸ் கோபால் 19 ரன்கள் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும், மிட்செல் சான்ட்னெர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

152 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அடுத்தடுத்த அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். சுரேஷ் ரெய்னா 4 ரன்னும், பாப் டுபிளிஸ்சிஸ் 7 ரன்னும், கேதர் ஜாதவ் 1 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

கேப்டன் டோணியும், அம்பத்தி ராயுடுவும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவருமே அரை சதம் அடித்தனர். 57 ரன்களில் ராயுடுவும், 58 ரன்களில் டோணியும் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில், கடைசி பந்தில் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. ஒரு சிக்சர் அடித்து அந்த ரன்களை எடுத்தார் சான்ட்னர். சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தனது 6வது வெற்றியை பதிவு செய்தது. டோணி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ராஜஸ்தான் தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்கர்னி, ஆர்ச்சர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இன்றைய ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ், ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா

– வணக்கம் இந்தியா

From around the web