கிங்ஸ் லெவன் பஞ்சாபை ரொம்ப கூலாக வென்ற டோணி!

சென்னை: ஐபிஎல்லின் ஆட்டம் இன்று சென்னையில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாபும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன், டு ஃப்ளசிஸ் சிறப்பான தொடக்கம் தந்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக டு ப்ளசிஸ் 54 (38) ரன்கள், டோனி 37 (23) ரன்கள், ஷேன் வாட்சன் 26 (24) ரன்கள், அம்பத்தி ராயுடு 21 (15) ரன்கள்
 

கிங்ஸ் லெவன் பஞ்சாபை ரொம்ப கூலாக வென்ற டோணி!
சென்னை: ஐபிஎல்லின் ஆட்டம் இன்று சென்னையில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாபும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன், டு ஃப்ளசிஸ் சிறப்பான தொடக்கம் தந்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக டு ப்ளசிஸ் 54 (38) ரன்கள், டோனி 37 (23) ரன்கள், ஷேன் வாட்சன் 26 (24) ரன்கள், அம்பத்தி ராயுடு 21 (15) ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஆர் அஸ்வின் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்தது.

பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 55 (47) ரன்கள், சர்ப்ராஸ் கான் 67 (59) ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் ஸ்காட் குகலின் மற்றும் ஹர்பஜன்சிங் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெறும் சூழல் இருந்தது. ஆனால் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ஸ்காட் குகலின் ஆகியோரின் கட்டுப்பாடான பந்துவீச்சு, கேப்டன் டோணி அலட்டிக் கொள்ளாமல் அமைத்த சரியான வியூகம் காரணமாக சென்னை அணி 22 ரன்களில் 4 வது வெற்றியைப் பெற்றது.

– வணக்கம் இந்தியா

From around the web