சென்னையின் இரண்டாவது விமான நிலையம்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தேர்வு?

சென்னை பெருநகரின் விமான சேவைகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று நீண்டநாட்களாக பேசப்பட்டது. பின்னர் சமீபகாலத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் விமான நிலையத்திற்கான இடம் தேர்வு செய்வதற்கான
 

சென்னையின் இரண்டாவது விமான நிலையம்!  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தேர்வு?சென்னை பெருநகரின் விமான சேவைகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று நீண்டநாட்களாக பேசப்பட்டது. பின்னர் சமீபகாலத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் விமான நிலையத்திற்கான இடம் தேர்வு செய்வதற்கான ஆய்வு நடைபெற்றது. தற்போது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே விமான நிலையத்திற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு செய்யப் போவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இங்கு நிலம் கையகப்படுத்தவதற்கான செலவு குறைவு என்ற காரணம் கூறப்படுகிறது. ஆனால் செய்யாறு என்பது சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டதைத் கடந்து தென்மேற்கே திருவண்ணாமலை மாவட்டத்தின் மையப் பகுதியில் உள்ளது. 

சென்னையின் இரண்டாவது விமான நிலையம்!  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தேர்வு?

தேசிய நெடுஞ்சாலையை விட்டு தொலை தூரத்தில் உள்ள செய்யாறுக்கு தற்போது செல்வதற்கு நேரடி சாலை இல்லை. செங்கல்பட்டிலிருந்தோ அல்லது மேல்மருவத்தூரிலிருந்தோ வந்தவாசி சென்று தான் செய்யாறு போக முடியும். அதே வேளையில் சேலம் – சென்னை 8 வழிச் சாலை நிறைவேற்றப் பட்டால், அந்தத் திட்டத்தில் செய்யாறுக்கு இணைப்பு சாலை உள்ளதாகத் தெரிகிறது.

8 வழிச் சாலையை முன் வைத்தே இரண்டாவது விமான நிலையத்தை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றம் செய்ய திட்டமிடப்படுகிறோ என்ற கேள்விகளும் எழுகிறது.

ஒரு வேளை செய்யாறில் பசுமை பன்னாட்டு விமான நிலையம் அமைந்தால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் வரையிலும் சென்னை புறநகர் விரிவடைந்து விடும் என்றும் நம்பலாம்.

A1TamilNews.com

 

From around the web