விண்ணில் பாய்வதற்கு சந்திராயன்2  தயார் ..  நிலவைத் தொடுவது எப்போது?

ஸ்ரீஹரிகோட்டா: கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்ட சந்திராயன் 2 விண்ணில் பாய்வதற்கு தயார் நிலையில் உள்ளதாக முன்னாள் இஸ்ரோ சேர்மன் ஏ.எஸ்.கிரண்குமார் கூறியுள்ளார்.தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு நாளை, திங்கட்கிழமை விண்ணில் செலுத்தப்பட அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக ஏஎன்ஐ செய்தியாளரிடம் கூறியுள்ளார். ஜூலை 15ம் தேதி விண்ணில் செலுத்தப்பட தயாராக இருந்த வேளையில், ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக நிறுத்தப்பட்டது. முழுக்கவும் இந்தியாவில் தயாரான தொழில் நுட்பத்தில் உருவான சந்திராயன்2, நிலவின் தெற்குப் பகுதியில் செப்டம்பர் 6
 

விண்ணில் பாய்வதற்கு சந்திராயன்2  தயார் ..  நிலவைத் தொடுவது எப்போது?ஸ்ரீஹரிகோட்டா: கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்ட சந்திராயன் 2  விண்ணில் பாய்வதற்கு தயார் நிலையில் உள்ளதாக முன்னாள் இஸ்ரோ சேர்மன் ஏ.எஸ்.கிரண்குமார் கூறியுள்ளார்.தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு நாளை, திங்கட்கிழமை விண்ணில் செலுத்தப்பட அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக ஏஎன்ஐ செய்தியாளரிடம் கூறியுள்ளார்.

ஜூலை 15ம் தேதி விண்ணில் செலுத்தப்பட தயாராக இருந்த வேளையில், ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக நிறுத்தப்பட்டது. முழுக்கவும் இந்தியாவில் தயாரான தொழில் நுட்பத்தில் உருவான சந்திராயன்2, நிலவின் தெற்குப் பகுதியில்  செப்டம்பர் 6 அல்லது 7ம் தேதி இறங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மெதுவாக தரையிறங்கும் தொழில் நுட்பத்தில் இந்தியாவின் முதல் முயற்சியாக இது அமைகிறது. நிலவில் தரையிறங்கும் இத்தகைய முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து நான்காவது நாடு இந்தியா ஆகும்.

From around the web