தமிழக அரசின் நீட் விலக்க மசோதாவை குப்பையில் போட்ட மத்திய அரசு!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைதுக் கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்க மசோதா நிராகரிக்கப் பட்டுள்ளதாக மத்திய் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாணவர் பெற்றோர் சங்கம் சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்க மசோதாவுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரி வழக்கு தொடரப் பட்டிருந்தது. விசாரணைக்கு இந்த வழக்கு வந்த போது, இந்த மசோதா நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. மசோதா மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட தேதி,
 

தமிழக அரசின் நீட் விலக்க மசோதாவை குப்பையில் போட்ட மத்திய அரசு!சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைதுக் கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்க மசோதா நிராகரிக்கப் பட்டுள்ளதாக மத்திய் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாணவர் பெற்றோர் சங்கம் சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்க மசோதாவுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரி வழக்கு தொடரப் பட்டிருந்தது.

விசாரணைக்கு இந்த வழக்கு வந்த போது, இந்த மசோதா நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. மசோதா மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட தேதி, நிராகரிக்கப்பட்ட தேதி உள்ளிட்ட விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

முன்னதாக, புதிய பாராளுமன்றத்தின் கூட்டுத் தொடரில் திமுக எம்.பி திருச்சி சிவா, நீட் விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார். அப்போது இது குறித்து அரசுத் தரப்பில் பதில் ஏதும் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

– வணக்கம் இந்தியா

From around the web