சிபிஎஸ்இ 10,+2 வகுப்பு பொதுத்தேர்வுகள் 15 ஆயிரம் மையங்களில் நடத்தப்படும்! அமைச்சர் அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 21ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஜூலை 1ம் தேதி முதல் நடத்தப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. 12ம் வகுப்பில் குறிப்பிட்ட பாடங்கள் மட்டும் தேர்வுகள் நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் 3000 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டும், பயண தூரத்தை குறைக்கும்
 

சிபிஎஸ்இ  10,+2 வகுப்பு பொதுத்தேர்வுகள் 15 ஆயிரம் மையங்களில் நடத்தப்படும்! அமைச்சர் அறிவிப்பு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 21ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஜூலை 1ம் தேதி முதல் நடத்தப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

12ம் வகுப்பில் குறிப்பிட்ட பாடங்கள் மட்டும் தேர்வுகள் நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் 3000 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டும், பயண தூரத்தை குறைக்கும் வகையிலும் பொதுத்தேர்வுகள் எழுதும் மையங்களின் எண்ணிக்கை 15000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படமாட்டாது எனவும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web