ப சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்த சிபிஐ, அமலாக்கப் பிரிவு!

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவு ப சிதம்பரத்திற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் (தேடப்படும் நபர்) விடுத்துள்ளது. சிபிஐயும் அதுபோன்ற நோட்டீஸை விடுத்துள்ளது. சிதம்பரம் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க சிபிஐ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன்
 


டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவு ப சிதம்பரத்திற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் (தேடப்படும் நபர்) விடுத்துள்ளது. சிபிஐயும் அதுபோன்ற நோட்டீஸை விடுத்துள்ளது.

சிதம்பரம் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க சிபிஐ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க நேற்று மறுத்துவிட்டது. அவரது தரப்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் தொடர் இழுபறி ஏற்பட்டது. மனு தொடர்பாக இன்று விசாரணையில்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிபிஐயும், அமலாக்கப் பிரிவும் ப.சிதம்பரத்தை கைது செய்யவே தேடுகின்றன என விசாரணை முகமைகளின் வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web