கேரட் அல்வா ..!

தேவையான பொருட்கள்: கேரட் – 2 சர்க்கரை – 1கப் பால் – 1 கப் நெய் – 1/4 கப் ஃபுட் கலர் – சிறிதளவு ஏலக்காய் பவுடர் – சிறிதளவு முந்திரி பருப்பு – 10 செய்முறை: கேரட்டை சுத்தம் செய்து துருவிக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் பாலில், கேரட்டை சேர்த்து பால் நன்றாக
 

கேரட் அல்வா ..!தேவையான பொருட்கள்:

கேரட் – 2
சர்க்கரை – 1கப்
பால் – 1 கப்
நெய் – 1/4 கப்
ஃபுட் கலர் – சிறிதளவு
ஏலக்காய் பவுடர் – சிறிதளவு
முந்திரி பருப்பு – 10

செய்முறை:
கேரட்டை சுத்தம் செய்து துருவிக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் பாலில், கேரட்டை சேர்த்து பால் நன்றாக வற்றும் வரை கிளறி விட வேண்டும்.

கேரட் வெந்த உடன் சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்து கிளறிவிட வேண்டும். சர்க்கரை கரைந்ததும், நெய் சேர்த்து ஒரு நிமிடம் கிளறிவிட வேண்டும். முந்திரிப்பருப்பால் அலங்கரிக்க சூடான சுவையான கேரட் அல்வா ரெடி.

A1TamilNews.com

From around the web