பாஜக கூட்டணி அதிமுகவினருக்கு சுத்தமா பிடிக்கலியா?

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக கட்சியால் தான் பாஜக தோற்றது என்று அதிமுக போட்டியிட்ட தொகுதிகளின் வாக்கு வித்தியாச புள்ளி விவரங்களை அள்ளித் தெளித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி. ஆனால் பாஜகவின் கோட்டையாக கருதப்படும் கன்னியாகுமரியில், கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகள் கூட கிடைக்கவில்லை என்ற விவரத்தை அவர் மறைத்து விட்டார். அங்கே காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் தான் நேரடிப் போட்டி என்பதுவும் குறிப்பிடத்தக்கது. கோயமுத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சியிடம் போட்டியிட்டாலும் கூட ஐந்தாயிரம் வாக்குகள் தான் பாஜக கூடுதலாகப் பெற்றுள்ளது. அதிமுக கட்சிக்குள்ளே,
 

பாஜக கூட்டணி அதிமுகவினருக்கு சுத்தமா பிடிக்கலியா?சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக கட்சியால் தான் பாஜக தோற்றது என்று அதிமுக போட்டியிட்ட தொகுதிகளின் வாக்கு வித்தியாச புள்ளி விவரங்களை அள்ளித்  தெளித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி. ஆனால் பாஜகவின் கோட்டையாக கருதப்படும் கன்னியாகுமரியில், கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகள் கூட கிடைக்கவில்லை என்ற விவரத்தை அவர் மறைத்து விட்டார். 

அங்கே காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் தான் நேரடிப் போட்டி என்பதுவும் குறிப்பிடத்தக்கது. கோயமுத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சியிடம் போட்டியிட்டாலும் கூட ஐந்தாயிரம் வாக்குகள் தான் பாஜக கூடுதலாகப் பெற்றுள்ளது.

அதிமுக கட்சிக்குள்ளே, பாஜகவை சேர்த்ததால் தான் 37 தொகுதிகளிலும் தோற்றோம். தனித்துப் போட்டியிட்டு இருந்தால் 10 தொகுதிகளிலாவது வென்றிருக்கலாம். பாஜகவின் பாவ மூட்டைகளை நாம் சுமக்க வேண்டுமா என்றெல்லாம் குரல்கள் எழுகின்றன. உடனடியாக வரப்போகும் உள்ளாட்சி தேர்தலிலாவது பாஜகவை கழட்டி விட்டு விட வேண்டும் என்று மூத்த தலைவர்கள் கூட கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கட்சித் தலைவர்கள் மட்டத்தில் தான் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கூட்டணி ஏற்பட்டதாகத் தெரிகிறதே ஒழிய, தொண்டர்கள் மத்தியில் பாஜகவுடன் அதிமுக தொண்டர்கள் நெருங்கவே இல்லை என்று தான் தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் அதிமுக அணியில் ஐந்தே ஐந்து தொகுதிகளில் மட்டும் பாஜக போட்டியிட்டது. அதில் கன்னியாகுமரி, கோயமுத்தூர் தொகுதிகளில் பாஜகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதாக கூறப்படுவது உண்டு. இந்த தொகுதிகளில் பாஜக ஏற்கனவே வெற்றியும் பெற்றிருக்கிறது. 

2014ம் ஆண்டு தேர்தலில்  “லேடியா? மோடியா?” என்ற போட்டியில் கூட மதிமுக, தேமுதிக, பாமக கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பாஜக, கன்னியாகுமரியில் வென்றது. ஆனால் இந்த தடவை சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் பரிதாபமாகத் தோற்றுள்ளார் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன்.

கோயமுத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சியிடம் 1 லட்சத்து 79 ஆயிரம் வாக்குகள், சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியிடம் 3 லட்சத்து 32 ஆயிரம் வாக்குகள், தூத்துக்குடியில் திமுகவிடம் 3 லட்சத்து 47 ஆயிரம் வாக்குகள், ராமநாதபுரத்தில் 1 லட்சத்து 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசங்களில் பாஜக தோல்வியுற்றுள்ளது.

இந்த தொகுதிகளில் அதிமுக 2014ம் ஆண்டு பெற்றுள்ள வாக்குகளைப் பார்த்தால், அதிமுகவினருக்கும் பாஜகவுக்கும் உள்ள ஏழாம் பொருத்தம் தெரிய வருகிறது. கோயமுத்தூரில் 4 லட்சத்து 31 ஆயிரம், சிவகங்கையில் 4 லட்சத்து 78 ஆயிரம், ராமநாதபுரத்தில் 4 லட்சத்து 5 ஆயிரம், தூத்துக்குடியில் 3 லட்சத்து 66 ஆயிரம், கன்னியாகுமரியில் 1 லட்சத்து 76 ஆயிரம் வாக்குகளை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 2014ல் பெற்றிருந்தது.

அதிமுக கூட்டணியால் பாஜகவுக்கு கோவையில் 5 ஆயிரம், சிவகங்கையில் 1 லட்சம், ராமநாதபுரத்தில்  1 லட்சத்து 71 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளது. கன்னியாகுமரியில் 5 ஆயிரத்தி 600  வாக்குகள் குறைந்துள்ளது.  தூத்துக்குடியில் கடந்த தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை அந்த அணியில் உள்ள மதிமுக போட்டிட்டு 1 லட்சத்து 82 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தது. 

தூத்துக்குடியில் பாஜகவுக்கு அடித்தளம் பெரிதாக இல்லை. அங்கே திமுக, அதிமுக கட்சிகளுக்கு இடையேயான் போட்டியாகவே இருந்துள்ளது.  ஆனால், அதிமுகவுக்கு கடந்த தேர்தலில் கிடைத்த  3 லட்சத்து 66 ஆயிரம் வாக்குகளை, பாஜகவின் தமிழகத் தலைவர் டாக்டர்.தமிழிசை சௌந்தர்ராஜனால் கூட பெற முடியவில்லை. 2 லட்சத்து 16 ஆயிரம் வாக்குகளுடன் தமிழக பாஜக வேட்பாளர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற பெருமையையும்  கிடைக்கப் பெற்றுள்ளார் தமிழிசை. ஒரு வகையில் அவரை தூத்துக்குடியில் போட்டியிடச் செய்து பலிகடா ஆக்கிவிட்டார்கள் என்று கூடச் சொல்லலாம்.

சரி, ஏன் அதிமுக வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கவில்லை. டிடிவி தினகரன் அணிக்கும் பெருமளவில் அதிமுக வாக்குகள் பிரிந்து செல்லவில்லை. ஒன்றைக் கவனித்தால், பாஜக போட்டியிட்ட ஐந்து தொகுதிகளில் கன்னியாகுமரி, சிவகங்கை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், கோவையில் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட்டுள்ளார்கள். ராமநாதபுரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கும் தூத்துக்குடியில் திமுகவும் போட்டியிட்டுள்ளது.

திமுக தவிர மற்ற கட்சிகள் எல்லாம் அதிமுகவுடன் ஒரு காலக்கட்டத்தில் கூட்டணிக் கட்சியாக இருந்தவைகள் தான். அந்த பழைய பாசத்தில், பாஜகவுக்குப் பதிலாக  காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு வாக்களித்து விட்டார்கள் போலிருக்கு. தூத்துக்குடியில் தான் அதிமுகவின் வாக்குகள் திமுகவுக்கு கிடைக்க வில்லை என்று தெரிகிறது. 

ஆக, பாஜகவுடன் அதிமுக தொண்டர்களுக்கே ஒரு ஒட்டுதல் இல்லாமல்  இருப்பது தான் பாஜகவின் தோல்விக்கு ஒரு காரணமாகவும் தெரிகிறது. உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை கழட்டி விட அதிமுகவினர் ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் மத்தியில் பாஜக அல்லவா ஆட்சியில் இருக்கிறது. அவ்வளவு சுலபமாக அதிமுக வையும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியையும்  விட்டு விடுவார்களா என்ன?. அடுத்த சட்டமன்ற தேர்தல் வரையிலும் ஆடு புலி ஆட்டம் தொடரத் தான் செய்யும்!

– ஆர்டிஎக்ஸ்

From around the web