பிரேசில் அதிபர் வேட்பாளருக்கு ‘சிவாஜி’ பட ரஜினி ஸ்டைலில் வயிற்றில் கத்திக்குத்து!

பிரேசிலா : அக்டோபர் 7ம் தேதி பிரேசில் நாட்டின் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னணி வேட்பாளர் ஜெய்ர் போல்சோனரோ, பிரச்சாரக் கூட்டத்தில் கத்தியால் குத்தப்பட்டார். வயிற்றின் குடல், ஈரல் பகுதியில் ஆழமான காயம் ஏற்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். ஜெய்ர் போல்சோனரோ வின் மகன் ஃப்ளேவியோ, அவருடைய தந்தை நலமாக இருப்பதாகவும், இந்த கத்திக் குத்து சம்பவம் தேர்தலில் வெற்றியைத் தேடித் தரும் எனவும் கூறியுள்ளார். ஜெய்ர் போல்சோனரோ ஏற்கனவே வெற்றி
 

பிரேசில் அதிபர் வேட்பாளருக்கு ‘சிவாஜி’ பட ரஜினி ஸ்டைலில் வயிற்றில் கத்திக்குத்து!

பிரேசிலா : அக்டோபர் 7ம் தேதி பிரேசில் நாட்டின் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னணி வேட்பாளர் ஜெய்ர் போல்சோனரோ, பிரச்சாரக் கூட்டத்தில் கத்தியால் குத்தப்பட்டார். வயிற்றின் குடல், ஈரல் பகுதியில் ஆழமான காயம் ஏற்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

ஜெய்ர் போல்சோனரோ வின் மகன் ஃப்ளேவியோ, அவருடைய தந்தை நலமாக இருப்பதாகவும், இந்த கத்திக் குத்து சம்பவம் தேர்தலில் வெற்றியைத் தேடித் தரும் எனவும் கூறியுள்ளார். ஜெய்ர் போல்சோனரோ ஏற்கனவே வெற்றி பெற்று அதிபர் ஆகிவிட்டார். அக்டோபர் 7ம் தேதி அது உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

திவிர வலது சாரி கொள்கை உடைய 63 வயது ஜெய்ர், “எல்லாத்துக்கும் மேலே கடவுள் தான்” என்ற கடவுள் நம்பிக்கையை முன்னிறுத்தி போட்டியிடுகிறார். முன்னாள் ராணுவ வீரரான ஜெய்ர், முப்பது ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

கத்தியால் குத்தியவர் 40 வயது அடெலியோ பிஸ்போ டே ஒலிவெய்ரா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். மனநோயால் பாதிக்கப்பட்டவராக தெரியும் அவர் “இது கடவுள் இட்ட கட்டளை” என்று சொல்லிக் கொண்டே ஜெய்ர்-ன் வயிற்றில் குத்திவிட்டார்.

சிவாஜி படத்தில் அரசியல்வாதியாக வரும் ஹனிபாவுடன் பேசிக்கொண்டே, அவருடைய வயிற்றில் ரஜினிகாந்த் சட்டென்று குத்திவிடுவாரே, கிட்டத்தட்ட அதே போல் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த தேர்தலில் ஜெய்ர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது.

 

From around the web