தேர்தல் தோல்வி எதிரொலி.. கூட்டணி கட்சிகளின் நெருக்கடியில் பாஜக!

டெல்லி: ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாஜகவின் தோல்வி, தேசிய ஜனநாயக முன்னணியில் எதிரொலித்துள்ளது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் கூடுதல் எண்ணிக்கையில் சீட்டுகள் கேட்டு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே பாஜக கூட்டணியில் உள்ளது. 2014ம் ஆண்டு பாஜக பீகாரில் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 2019 தேர்தலில் 17 தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிடுகிறது.
 
டெல்லி: ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாஜகவின் தோல்வி, தேசிய ஜனநாயக முன்னணியில் எதிரொலித்துள்ளது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் கூடுதல் எண்ணிக்கையில் சீட்டுகள் கேட்டு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.
 
பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ்வானின்  லோக் ஜனசக்தி கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே பாஜக கூட்டணியில் உள்ளது. 2014ம் ஆண்டு பாஜக பீகாரில் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 
 
2019 தேர்தலில் 17 தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிடுகிறது. ஐக்கிய ஜனதா தளத்திற்கு 17 தொகுதிகளும், ராம்விலாஸ் பஸ்வானினின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப் பட்டுள்ளன. லோக் ஜனசக்தி கட்சிக்கு கூடுதலாக ஒரு ராஜ்யசபா எம்பியும் கொடுக்கப்பட்டுள்ளது.
 
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு  ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியும், இந்துஸ்தானி அவாம் மோர்சாவும் பாஜக கூட்டணியிலிருந்து விலகி, காங்கிரஸ் அணியில் சேர்ந்து விட்டார்கள். கூட்டணியில் இருக்கும் ராம்விலாஸ் பஸ்வானும், நிதிஷ்குமாரும் தொகுதி பங்கீட்டில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்கள். 
 
மஹாராஷ்ட்ராவில், சிவசேனா எங்களுடைய நீண்டகால இயல்பான தோழமைக் கட்சி என்று பாஜகவினர் கூறி வருகிறார்கள். ஆனால், சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே,  ராமர் கோவில், ரஃபேல் விமானம், விவசாயக் காப்பீடு விவகாரங்களில் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார். 
 
பால் தாக்கரே காலத்தைப் போல் கூட்டணியில் சிவசேனாவுக்கு அதிகமான இடங்களுடன் மஹாராஷ்ட்ராவில் கூட்டணியின் தலைமைப் பொறுப்பும் கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அங்கு ஆட்சியில் இருக்கும் பாஜக மீது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தி இருப்பதால், தனித்து போட்டியிட்டாலும் சிவசேனாவுக்கு சாதகமான சூழல் இருப்பதாகவும் கருதப்படுகிறது.
 
இரண்டு பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு கூட்டணிக் கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருவதும், பெரும் பின்னடைவாகத் தெரிகிறது.
 
– வணக்கம் இந்தியா

From around the web