உபி, பீகார் இடைத் தேர்தல்…. படுதோல்வியை நோக்கி பாஜக!

லக்னோ: உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டசபை இடைதேர்தல்களில் ஆளும் பாஜக படு தோல்வியைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உ.பி.யில் கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர், மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர். எனவே இந்த இரு தொகுதிகளும் காலியாகின. பீகாரில் அரேரியா லோக்சபா தொகுதியும் காலியாக இருந்தது. இந்த மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும் பீகாரில் ஜகனாபாத், பஹாபூவா என இரண்டு
 

லக்னோ: உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டசபை இடைதேர்தல்களில் ஆளும் பாஜக படு தோல்வியைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

உ.பி.யில் கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர், மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர்.

எனவே இந்த இரு தொகுதிகளும் காலியாகின. பீகாரில் அரேரியா லோக்சபா தொகுதியும் காலியாக இருந்தது. இந்த மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும் பீகாரில் ஜகனாபாத், பஹாபூவா என இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 11-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது.

மேற்கண்ட 5 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 5 முறை எம்பியான கோரப்பூர் தொகுதியில் பாஜக பெரும் தோல்வி அடைந்துள்ளது.

பீகாரில் லாலு பிரசாதின் ஆர்ஜேடியுடன் கூட்டணி வைத்து நிதிஷ்குமார் முதல்வரானார். துணை முதல்வராக லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மாட்டு தீவன ஊழல் வழக்கில் தேஜஸ்வியின் பெயர் அடிபட்டதால் அவரைப் அவரைப் பதவி விலகுமாறு நிதிஷ் கோரினார். அவர் விலகாததால் தானே விலகுவதாகக் கூறி அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி, அடுத்த சில மணி நேரங்களில் கூட்டணி மாறி பாஜகவுடன் கைகோர்த்து முதல்வரானார் நிதிஷ்குமார்.

அதற்கான பலனை இந்த இடைத் தேர்தலில் அறுவடை செய்துள்ளார். ஆளும் கட்சியே இடைத் தேர்தலில் தோற்று சரித்திரம் படைத்துள்ளது பீகாரில். வட மாநிலங்களைப் பொறுத்தவரையில், மோடி அரசுக்கான எச்சரிக்கை மணியாக இந்த தோல்விகளைப் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

 

From around the web