இன்று பிகில் ஆடியோ விழா…. பாடுகிறாரா விஜய்?

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் ஆடியோ இன்று சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள பிகில் படம் தீபாவளிக்கு வெளி வருகிறது. ஏற்கனவே சிங்கப்பெண்ணே, வெறித்தனம் பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் நேற்று உனக்காக பாடல் வெளியானது. விவேக் எழுதியுள்ள ‘உனக்காக’ மெலடிப் பாடலை ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் மதுர தாரா தல்லுரி பாடியுள்ளனர். இன்று நடைபெற உள்ள ஆடியோ விழாவில்
 

இன்று பிகில் ஆடியோ விழா…. பாடுகிறாரா விஜய்?

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் ஆடியோ இன்று சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள பிகில் படம் தீபாவளிக்கு வெளி வருகிறது. ஏற்கனவே சிங்கப்பெண்ணே, வெறித்தனம் பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் நேற்று உனக்காக பாடல் வெளியானது. 

விவேக் எழுதியுள்ள ‘உனக்காக’  மெலடிப் பாடலை ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் மதுர தாரா தல்லுரி பாடியுள்ளனர். இன்று நடைபெற உள்ள ஆடியோ விழாவில் வெறித்தனம் பாடலை மேடையில் விஜய் பாடுவாரா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆடியோ வெளியிட்டையொட்டி புதிய ஸ்டில் ஒன்றும் வெளியாகியுள்ளது. லுங்கியுடன் கையில் கத்தியை வைத்திருக்கும் விஜய்யின் தோற்றம் அதில் உள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web