புதிய கல்விக் கொள்கை! காமராஜர் தொடங்கிய கட்டமைப்பை தரைமட்டமாக்குவதா?

பிற மாநிலங்கள் குறித்துப் பேசவில்லை. ஆனால் கிராமப்புற, எளிய மாணவர்களுக்கான கல்வி வழங்குதலில் தமிழகம் மிகச் சிறப்பாகவே இருக்கிறது. தவறுகள் இருக்கும், பிரச்சினைகளும் சிக்கல்களும் உண்டு. ஆனால் ஒட்டுமொத்தமாக சமூக வளர்ச்சி என்ற அளவில் பார்க்க வேண்டும். அதே போல, மாநிலத்தின் கல்வி நலன் சார்ந்து பேசும் அரசியல்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்தக் கட்டமைப்பை உருவாக்கியதில் காமராஜர் தொடங்கி ஜெயலலிதா வரைக்கும் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும் பங்களிப்பு இருக்கிறது. யாரையும் நிராகரிக்க முடியாது. அறுபதாண்டு காலமாக அவர்கள் உருவாக்கிய
 

புதிய கல்விக் கொள்கை! காமராஜர் தொடங்கிய கட்டமைப்பை தரைமட்டமாக்குவதா?பிற மாநிலங்கள் குறித்துப் பேசவில்லை. ஆனால் கிராமப்புற, எளிய மாணவர்களுக்கான கல்வி வழங்குதலில் தமிழகம் மிகச் சிறப்பாகவே இருக்கிறது. தவறுகள் இருக்கும், பிரச்சினைகளும் சிக்கல்களும் உண்டு.

ஆனால் ஒட்டுமொத்தமாக சமூக வளர்ச்சி என்ற அளவில் பார்க்க வேண்டும். அதே போல, மாநிலத்தின் கல்வி நலன் சார்ந்து பேசும் அரசியல்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்தக் கட்டமைப்பை உருவாக்கியதில் காமராஜர் தொடங்கி ஜெயலலிதா வரைக்கும் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும் பங்களிப்பு இருக்கிறது.

யாரையும் நிராகரிக்க முடியாது. அறுபதாண்டு காலமாக அவர்கள் உருவாக்கிய இந்தக் கட்டமைப்பை மேலும் வலுவாக மாற்றுகிற உரையாடல்கள்தான் தேவை. இல்லையென்றால் ‘இது சரியில்லை; அது சரியில்லை இடித்துவிட்டு புதிதாகக் கட்டுகிறோம்’ என்று கடப்பாரையை எடுத்து வருவார்கள்.

ஆமாம் சரியில்லை என்று நம்பி தலையை ஆட்டினால் தரைமட்டமான பிறகு மற்ற மாநிலங்களைப் போலவே நாமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம்!

– வா.மணிகண்டன்

From around the web