சுற்றுலா தலமாக மாறும் அயோத்தி!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அரசு மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுகள் அடுத்தடுத்த பல திட்டங்களை செயல்படுத்த இருக்கிறார்கள். அதன் முதல்கட்டமாக அயோத்தியை நாட்டின் முன்னோடி ஆன்மிக சுற்றுலாத் தலமாக மாற்ற முடிவாகி இருக்கிறது. அயோத்தி வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வந்ததால் அங்கு கட்டுமானங்கள் உள்ளிட்ட எதுவும் பெரிய அளவில் இதுவரை செய்யப்படாமல் இருந்து வந்தது. தற்போது கோயில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதற்கான பணிகளை
 

சுற்றுலா தலமாக மாறும் அயோத்தி!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அரசு மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுகள் அடுத்தடுத்த பல திட்டங்களை செயல்படுத்த இருக்கிறார்கள். அதன் முதல்கட்டமாக அயோத்தியை நாட்டின் முன்னோடி ஆன்மிக சுற்றுலாத் தலமாக மாற்ற முடிவாகி இருக்கிறது.

அயோத்தி வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வந்ததால் அங்கு கட்டுமானங்கள் உள்ளிட்ட எதுவும் பெரிய அளவில் இதுவரை செய்யப்படாமல் இருந்து வந்தது. தற்போது கோயில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதற்கான பணிகளை துரிதப்படுத்த உத்தரப்பிரதேச அரசு தீவிரம் காட்டுவதாகத் தெரிகிறது. ராமர் கோவில் அமைய உள்ள இடத்தை சுற்றிலும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு ஆன்மீக சுற்றுலாப் பயணிகளுக்கு பயன்படும் வகையில் புதிய கட்டுமானங்கள் அமைக்கப்பட உள்ளன.

ராமாயணத்தை விளக்கும் வகையிலான அருங்காட்சியகம் பல்நோக்கு அரங்கங்கள், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் மற்றும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்கள் ஆகியவற்றை அமைக்கவும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. ராமர் கோவில் அமைக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழத் தொடங்கியிருக்கிறது.

வாரணாசி கங்கா ஆரத்தி நிகழ்வை போன்று அயோத்தியில் ஓடும் சரயு நதிக்கரையில் மாடங்களை அமைத்து ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. படகு சவாரி செயல்படுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என அயோத்தியில் உள்ள மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

https://www.A1TamilNews.com

From around the web