ராமர் கோயில் கட்டலாம் – அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அயோத்தி வழக்கில், ராமர் கோயில் கட்டலாம் என்றும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அயோத்தியிலேயே மசூதி கட்ட இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து 40 நாட்கள் நடந்த விசாரணைக்குப்பிறகு, அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு காலை பத்து முப்பது மணி அளவில் தீர்ப்பை வாசிக்கத்தொடங்கியது. தீர்ப்பை
 

ராமர் கோயில் கட்டலாம் – அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!அயோத்தி வழக்கில், ராமர் கோயில் கட்டலாம் என்றும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அயோத்தியிலேயே மசூதி கட்ட இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து 40 நாட்கள் நடந்த விசாரணைக்குப்பிறகு, அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு காலை பத்து முப்பது மணி அளவில் தீர்ப்பை வாசிக்கத்தொடங்கியது. தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த வழக்கில் சன்னி பிரிவினருக்கு எதிராக ஷியா வக்பு வாரியத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் த‌ள்ளுபடி செய்தது. அவர் வாசித்த தீர்ப்பில், ”மதநம்பிக்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. மதங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை உச்சநீதிமன்றம் மதிக்கிறது. அமைதி காக்கவும், பாதுகாப்பை பராமரிக்கும் வகையிலும் அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம், அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்.

நிலத்திற்கு உரிமை கோரிய நிர்மோஹி அகாரா மனுவில் ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை. அயோத்தியில் காலியிடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் இருந்த கட்டடம் இஸ்லாமிய கட்‌டுமான‌‌ம் இ‌ல்லை என்பதற்கு ஆதாரம் உள்ளது. அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாகவும், அந்த இடத்தை பாபர் மசூதி என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். ஆவணங்களின்படி, அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்றும், நிலம் தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்‌றிக்கையை நிராகரித்துவிட முடியாது என்றும் தெரிவித்த நீதிபதி, நிலத்தின் உரிமையை நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது

1857 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்துக்கள், சர்ச்சைக்குரிய கட்டத்தின் உள்பகுதிக்குச் சென்று வழிபட தடை இல்லை. 1857 ல் க‌ட்டடத்தின் உள்பகுதிக்கும், வெளி‌ப்பகுதிக்கும் இடையே தடுப்புகள் உருவாக்கப்பட்டன. பாபர் மசூதி இருந்த இடம் தங்களுடையது என்று இஸ்லாமியர்கள் நிரூபிக்கவில்லை. 1992 பாபர் மசூதி இடிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் மூன்றாக பிரித்துக்கொடுத்தது தவறு. அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பு தவறு. நிலத்திற்கு உரிமை கோரிய நிர்மோஹி அகாரா மனு தள்ளுபடி. இஸ்லாமியர்களுக்கு மாற்று இடமாக 3 மாதங்களுக்குள் 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய 2,.77 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web