வார இராசி பலன் (6-09-2019 முதல் 12-09-2019 வரை)
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
பணவரவு தாராளமாக இருக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
ஒருசிலர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். நண்பர்களிடையே பகைமை உண்டாகும்.
நன்மை தரும் நாட்கள்: 7,8,9
சந்திராஷ்டமம் : 6 – இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் சாதகமான பலன்கள் இருக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் நல்ல லாபம் தரும்.
பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். குழந்தைகளினால் நன்மை உண்டாகும். கல்விக்கான கடனுதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 6, 7, 11
சந்திராஷ்டமம் : 7, 8, 9 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். பிரயாணம் நன்மை தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பாகப்பிரிவினை நடைபெறும். பழைய வாகனத்தை விற்று புதுவாகனம் வாங்க முடியும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும்.
காதல் விவகாரம் மகிழ்ச்சி தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் இடமாற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 6,7,11,12
சந்திராஷ்டமம் : 10,11,12 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)
பல வகைகளில் பணம் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழிலில் சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பதவிகள் வந்து சேரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதத்தில் பட்டங்கள் கிடைக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 7, 9, 10
சந்திராஷ்டமம் : 12- இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
உறவினர்களும், நண்பர்களும் ஓடி வந்து உதவி செய்வர். ஆதரவு பெருகும். நல்ல உடல்நலம் இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். பிரயாணம் நன்மை தரும். வீட்டை புதுப்பீர்கள்.
நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். கல்வியில் முன்னேறம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். உத்தியோகத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். திருமண முயற்சிகளில் சில தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் தராது.
நன்மை தரும் நாட்கள்: 6,9,10
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
தடைபட்டு நின்ற யோகங்கள் 10ம் தேதி முதல் முழு வீச்சில் செயல்படத் தொடங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சிறப்புடன் நடைபெறும். மகிழ்ச்சி, செல்வாக்கு உயரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். நிதிநிலை உயரும்.
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். இடமாற்றம் நன்மை தராது. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திருமணங்கள் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தராது. உத்தியோகத்தில் குழப்பங்கள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 6, 18, 11
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
பல வகைகளில் பணவரவு உண்டாகும். ஆசைகள் நிறைவேறும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சுரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். திருமணம் நிச்சயம் ஆகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
காதல் விவகாரத்தில் ஊடல் உண்டாகும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 6, 7, 10, 12
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். காதல் விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
நன்மை தரும் நாட்கள்: 8, 9, 12
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். இடமாற்றம் தாமதமாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்காது. காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.
சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.
வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பண வரவு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும் அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 6, 8, 9
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். உடல்நலம் பாதிக்கப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் விலகிச் செல்வர். இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் நன்மை தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்காது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். கல்வியில் பின்னடைவு உண்டாகும்.
உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் லாபகரமாக அமையும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதம் நஷ்டம் தரும். . உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்காது.
நன்மை தரும் நாட்கள்: 9, 11, 12
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். உடல்நலக்குறைவு உண்டாகும். பிரயாணம் ஏற்படும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய பதவிகள் கிடைக்கும்.
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்காது.
நன்மை தரும் நாட்கள்: 6, 7, 12
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். முதலீடுகளிலிருந்து லாபம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் உண்டாகும். நண்பர்களிடையே பகைமை உண்டாகும். பண வரவு போதுமானதாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக அமையும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி பாதிக்கப்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 7, 9, 12
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)