வார இராசி பலன் (13-09-2019 முதல் 19-09-2019 வரை)
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
மகிழ்ச்சி நிறைந்த வாரம். உடல்நலம் நன்றாக இருக்கும். கடன்கள் தீர்ந்து போகும். சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வங்கியில் நிதி நிலை உயரும். கணவன் மனைவி உறவு சிறப்பாக அமையும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எடிட்டிங், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். தர்மகாரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சி தரும். பங்குச்சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும்.
நன்மை தரும் நாட்கள்: 14,16,18
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் ஓடி வந்து உதவுவர். வங்கியில் நிதி நிலை உயரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை நல்ல லாபம் தரும்.
சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகள் காணப்படும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை.
நன்மை தரும் நாட்கள்: 13, 16, 18
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
மதிப்பு செல்வாக்கு உயரும். உடல்நலம் நன்றாக இருக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். பயிர்த் தொழில் நல்ல பலன் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும்
காதல் விவகாரம் மகிழ்ச்சி தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். திருமண முயற்சிகள் வெற்றி தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 13,14,16
கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நிதிநிலை உயரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். பிரயாணங்கள் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். விளம்பரத் தொழில் லாபம் தரும் .
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் நிறைவேறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை லாபமீட்டும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 14, 17, 18
சந்திராஷ்டமம் : 13,14 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வங்கியில் நிதிநிலை உயரும். பல வகைகளில் பணவரவு உண்டாகும். ஆசைகள் நிறைவேறும்.
புது நண்பர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும்.
இடமாற்றம் உண்டாகும்.
புதிய பதவிகள் தேடி வரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் சிறப்பாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். கல்வியில் முன்னேறம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் தீர்ந்து போகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 16, 18, 19
சந்திராஷ்டமம் : 14,15,16 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
மதிப்பு செல்வாக்கு உயரும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வங்கியில் நிதிநிலை உயரும்.
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். இடமாற்றம் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் தோல்வி ஏற்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில் லாபகரமாக இருக்காது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, நிலம் ,வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் கைகூடும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். காதல் விவகாரத்தில் ஊடல் உண்டாகும்.
நன்மை தரும் நாட்கள்: 13, 14, 16
சந்திராஷ்டமம் : 17 18,19 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
உடல்நலக்குறைவு உண்டாகும். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் காணப்படும். வரவு தாராளமாக இருந்தாலும் செலவினங்கள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்களில் ஊடல்கள் காணப்படும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும்.
நன்மை தரும் நாட்கள்: 14, 17, 19
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
மதிப்பு செல்வாக்கு உயரும். பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். எதிரிகள் அடி பணிவார்கள். பணவசதி தாராளமாக இருக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
இடமாற்றம் தாமதமாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். கல்வியில் தடைகள் காணப்படும். திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். நண்பர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 13, 14, 16, 18
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வீடு, நிலம், வாகனம் வாங்க முடியும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்கள் ஒதுங்கிச் செல்வர். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபம் தராது. காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி உண்டாகும். .
சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்குச் சந்தை லாபம் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பண வரவு உண்டாகும். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான் நிலையில் இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 13, 14, 16, 18
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
முயற்சிகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க நேரிடும். உடல்நலம் குன்றும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்காது. பிரயாணங்களில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது.
நண்பர்களின் உதவி கிடைக்காது. ஆசைகள் நிராசையாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேறம் அடையும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 13, 16, 18
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகளில் லாபகரமாக முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணவரவு உண்டாகும். நிதிநிலை உயரும். ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகள் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். குடும்பத்தில் பாகப்பிரிவினை உண்டாகும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்காது. வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்காது. சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 14, 17
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும்.
அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் நடைபெறும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 13, 14, 16
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)