அக்டோபர் 25 – 31 வார இராசிபலன்கள்… ஆடை, ஆபரணங்கள் வாங்கலாமா?

வார இராசி பலன் (25-10-2019 முதல் 31-10-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) மனக்கவலை அதிகரித்து காணப்படும். உடல்நலம் பாதிக்கும். 27ம் தேதி வரை பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். 27ம் தேதிக்குப் பிறகு குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி உறவில் விரிசல் உண்டாகும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். உத்தியோகத்தில்
 

 வார இராசி பலன் (25-10-2019 முதல் 31-10-2019 வரை)

அக்டோபர் 25 – 31  வார இராசிபலன்கள்… ஆடை, ஆபரணங்கள் வாங்கலாமா?மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

மனக்கவலை அதிகரித்து காணப்படும். உடல்நலம் பாதிக்கும். 27ம் தேதி வரை பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். 27ம் தேதிக்குப் பிறகு குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி உறவில் விரிசல் உண்டாகும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும்.
 
உத்தியோகத்தில் பிரச்சினைகள் உண்டாகும். இடமாற்றம் கவலையைத் தரும். பிரயாணம் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் தோல்வி ஏற்படும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்குச்சந்தை லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். கடவுள் நம்பிக்கை குறையும். நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழில் முன்னேற்றமாக நடைபெறும். கௌரவம் காப்பாற்றப்படும். தந்தை வழி சொத்துக்கள் வந்து சேரும்.
 
நன்மை தரும் நாட்கள்: 25,26,28

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். பங்குச் சந்தை நல்ல பலன் தரும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும்.
 
ரேஸ் லாட்டரி லாபம் தரும். கல்வியில் சிறு தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் பிரச்சினைகளைத் தரும். வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். பயிர்த் தொழில் பாதிக்கப்படும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பிஎப் பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்காது.
 
நன்மை தரும் நாட்கள்: 25, 26, 8

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் வாங்க கடன் வாங்க வேண்டியது வரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தைத் தரும். பயிர்த் தொழிலில் பூச்சிகளால் பாதிப்பு உண்டாகும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். கல்விக்கான கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். இடமாற்றம் உண்டாகும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை பயக்கும்.
 
உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளில் சிறிது தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் பிரிவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டு பிரயாணம் உண்டாகும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும்.
 
நன்மை தரும் நாட்கள்: 25, 26, 27

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சிலர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவர். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றம் நன்மை தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும்.

ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பதவி உயர்வு கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும். கணவன், மனைவி உறவில் விரிசல் உண்டாகும்.

நன்மை தரும் நாட்கள்: 25, 26, 27

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வங்கியில் நிதிநிலை உயரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். பணவரவு பல இனங்களிலிருந்து ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய மாற்றம் உண்டாகும். புதிய பதவிகள் தேடிவரும். மதிப்பு, செல்வாக்கு உயரும்.
 
எடிட்டிங், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் ஏற்படும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 25, 26, 27, 28

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், இடமாற்றமும் உண்டாகும். தொழில் சம்மந்தமான பிரயாணங்கள் ஏற்படும். புதிய பதவிகள் தேடிவரும். மதிப்பு செல்வாக்கு உயரும். பிறரை சந்திக்கும் போதும், தகவல்கள் பெறுவதிலும் தடைகள் காணப்படும்.  சில நேரங்களில் மனக்குழப்பம் உண்டாகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். 
 
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். உடல்நலம் சிறிது பாதிக்கப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். காதல் விவகாரத்தில் பிரச்சனை உண்டாகும்.  
 
நன்மை தரும் நாட்கள்: 25, 26, 28

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபப் பங்கு வந்து சேரும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும்.  திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். பணவிரயம் உண்டாகும். விலை உயர்ந்த ஆபரணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வும் இடமாற்றமும் உண்டாகும்.
 
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். லாட்டரி, ரேஸ் மூலம் பணம் கிடைக்கும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். பழைய வாகனத்தை விற்க முடியும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். காதல் விவகாரத்தில் சிறிது ஊடல்கள் உண்டாகும்.
 
நன்மை தரும் நாட்கள்: 25, 26, 29, 31

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் விலகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.
 
சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்கும். பங்குச் சந்தை நல்ல பயன் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பூர்விகச் சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக அமையும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உழைக்காத பணம் சேரும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும். தொழிலில் சில நஷ்டங்களை சந்திக்க நேரிடும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 27, 29, 31

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். உடல்நலம் பாதிக்கும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். பயிர்த் தொழில் லாபம் தராது. எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிலம், வீடு விற்று பணம் கிடைக்கும்.
 
காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபமீட்டும். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.
 
நன்மை தரும் நாட்கள்: 25, 26, 30 

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். வங்கியில் நிதிநிலை குறையும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் ஒதுங்கிச் செல்வர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், விளம்பரத் தொழில் எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். லாட்டரி லாபம் தரும். முதலீடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நல்ல லாபம் தரும். 
 
கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். ஆசைகள் நிறைவேறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். பங்குச்  சந்தை லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.  அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். 
 
நன்மை தரும் நாட்கள்: 25, 27, 29
 
சந்திராஷ்டமம் : 25, 26  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

நினைத்த காரியங்கள் நடைபெறும். பணவரவு பலவகைகளில் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இடமாற்றம் கவலையைத் தரும். தொழில் மந்தமாக நடைபெறும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வு வெற்றியைத் தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தராது. 

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். சினிமா, சங்கீதம் பெயர் புகழ் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். சில பதவிகள் பறிபோகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கடன்கள் மறைந்து போகும். 

நன்மை தரும் நாட்கள்: 25, 29, 30

சந்திராஷ்டமம் : 26, 27  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மதிப்பு, செல்வாக்கு உயரும். ஆன்மீகம் மற்றும் தர்ம காரியங்களில் ஈடுபட நேரிடும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். வங்கியில் நிதிநிலை உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். இடமாற்றமும் பயணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வு வெற்றி தராது.

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நல்ல லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் உண்டாகும். சில கடன்கள் தொல்லை தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். 

நன்மை தரும் நாட்கள்: 27, 28, 29
 
சந்திராஷ்டமம் : 27, 28, 29  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
 
அக்டோபர் 25 – 31  வார இராசிபலன்கள்… ஆடை, ஆபரணங்கள் வாங்கலாமா?
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
முந்தைய வாரம்:

From around the web