வார இராசி பலன் (18-10-2019 முதல் 24-10-2019 வரை)
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். சிறிது உடல்நலம் பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.
சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரம் பிரச்சினையைக் கொடுக்கும். பங்குச் சந்தை லாபம் ஈட்டும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சிறப்பாக நடைபெறும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும்.
நன்மை தரும் நாட்கள்: 21, 22, 23
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே சில பிரிவினை உண்டாகும். உடல்நலம் பாதிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றி தரும். சினிமா, சங்கீதம் நல்ல லாபம் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும்.
காதல் விவகாரத்தில் சில ஊடல்கள் ஏற்பட்டு மறையும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். நண்பர்களிடையே பிரிவினை ஏற்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தொழில் மந்தநிலையில் நடைபெறும்.
நன்மை தரும் நாட்கள்: 20, 23, 24
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
மகிழ்ச்சியான வாரம். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். சிலர் பூர்வீகச் சொத்தை விற்று வீடு வாங்குவர். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை நடைபெறும். வாரக் கடைசியில் உடல்நலம் பாதிக்க வாய்ப்புண்டு.
காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச்சந்தை லாபமீட்டும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். உத்தியோகத்தில் பதவி உறவு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 19, 20, 21, 23
கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)
பல வகைகளில் பணவரவு உண்டாகும். லாபகரமான வாரம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும்.
கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். ஆசைகள் நிறைவேறும். நிதிநிலை உயரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 18, 19, 24
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
இடமாற்றம் உண்டாகும். பிரயாணம் ஏற்படும். மனம் அலைபாயும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவிக்கரம் நீட்டுவர். வங்கியில் நிதிநிலை உயரும். ஆசைகள் நிறைவேறும். சில நிலங்களை விற்று பணவரவு ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றத்துடன் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சிறப்பாக நடைபெறும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரம் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.
நன்மை தரும் நாட்கள்: 19,20, 23
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
இடமாற்றம் உண்டாகும். பிரயாணம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டாகும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். எடிட்டிங், விளம்பரத் தொழில், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணவரவு எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து கிடைக்கும்.
அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பிரயாணம் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். சில சமயங்களில் மனக்கவலையும் குழப்பங்களும் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண ஒப்பந்தங்கள் ஏற்படும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சி தரும்.
நன்மை தரும் நாட்கள்: 18, 20, 21, 23
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உடல்நலம் பாதிக்கப்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பகைவர்கள் சரணடைவார்கள். தொழில் தொடங்கவும், உயர்கல்விகான கடனுதவி கிடைக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். முதலீடுகள் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். உறவினர்களிடையே பிரிவினை உண்டாகும்.
பணவிரயம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். லாட்டரி லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சி தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 18, 19 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
நன்மை தரும் நாட்கள்: 21, 22, 24
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகள் சரணடைவர். கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். பங்குச் சந்தை லாபம் தரும்.
பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பயிர்த் தொழில் நல்ல லாபம் தரும். கணவன், மனைவி உறவில் விரிசல் ஏற்படும். கூட்டு வியாபாரம் நன்மை தராது. பிரயாணம் ஏற்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உழைக்காத பணம் வரும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.
சந்திராஷ்டமம் : 19, 20, 21 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
நன்மை தரும் நாட்கள்: 19, 20, 21, 23
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
இடமாற்றம் உண்டாகும். நிலம், வாகனத்தில் முதலீடு செய்ய நேரிடும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் பின்னடைவு ஏற்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். பயிர்த் தொழில் நன்மை தராது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 21, 22, 23 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
நன்மை தரும் நாட்கள்: 20, 21, 22
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் விலகிச் செல்வர். நாவை அடக்காவிட்டால் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். பிரயாணம் நன்மை தரும். இடமாற்றம் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ரேஸ் லாட்டரி லாபம் தரும்.
சந்திராஷ்டமம் : 24 – இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
நன்மை தரும் நாட்கள்: 19, 20, 23
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பலவகைகளில் பணவரவு உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்களும் நண்பர்களும் ஓடி வந்து உதவுவர். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். முதலீடுகள் நன்மை தரும். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடத்திற்கு மாற்றல் உண்டாகும். பிரயாணம் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும்.
தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். சில சமயங்களில் மதிப்பு, கௌரவம் பாதிக்கப்படும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். காதல் விவகாரத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். சினிமா, சங்கீதம் பின்னடவைச் சந்திக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.
நன்மை தரும் நாட்கள்: 21, 22, 24
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஆன்மீகம், தர்மகாரியங்களில் மனம் செல்லும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். பிரயாணம் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கடன்கள் கட்டுக்கடங்கி இருக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும்.
நன்மை தரும் நாட்கள்: 19, 21, 22
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
முந்தைய வாரம்: