மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
பணவரவு தாராளமாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபப் பங்கு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஒப்பந்தக்காரர்கள் லாபம் அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய பதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
நன்மை தரும் நாட்கள்: 10, 11, 12
