மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – கடகம்
கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)
உடல்நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழில் மந்தமாக நடைபெறும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. பங்குச் சந்தை நஷ்டம் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும்.
காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். வழக்குகள் வெற்றியைத் தரும். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சந்திராஷ்டமம் : 14, 15 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
