8-03-2019 முதல் 14-03-2019 வரையிலான வார இராசி பலன்கள்
வார இராசி பலன் (8-03-2019 முதல் 14-03-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) உத்தியோகத்தில் பிரச்சனை உண்டாகும். இட மாற்றத்தில் சிக்கல்கள் உண்டாகும். கடன்கள் கவலையைத் தரும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணம் வந்தாலும் கூட, தேவைக்கேற்ப இருக்காது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்புண்டு. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள்
Mar 8, 2019, 12:53 IST
வார இராசி பலன் (8-03-2019 முதல் 14-03-2019 வரை)
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
உத்தியோகத்தில் பிரச்சனை உண்டாகும். இட மாற்றத்தில் சிக்கல்கள் உண்டாகும். கடன்கள் கவலையைத் தரும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணம் வந்தாலும் கூட, தேவைக்கேற்ப இருக்காது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்புண்டு. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் தடைகளுக்கு மேல் வெற்றியைத் தரும்.
நன்மை தரும் நாட்கள்: 8, 11, 12
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். பணவரவு தாமதமாகும். காதல் விவகாரங்கள் பிரச்சனையைத் தரும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்காது. சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். வேலை தேடுவோர்க்கு சிரமத்தின் மேல் வேலை கிடைக்கும். திருமணம் தாமதமாகும். கணவன் மனைவி ஒற்றுமை குறையும்.
நன்மை தரும் நாட்கள்: 11, 12
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகளில் வெற்றி கிட்டாது. தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கல்வியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். மன அமைதி குறைந்து காணப்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். காதல் விவகாரங்கள் மனதிற்கு ஆறுதல் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடன்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 8, 10, 11, 12
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளினால் மதிப்பு உண்டாகும். மதிப்பு, செல்வாக்கு உயரும். அரசியலில் பதவி கிடைக்கும். திருமணத்தில் தடைகள் காணப்படும். வீடு, வாகனங்கள் செலவினங்களைக் கொடுக்கும். கல்வியில் முன்னேற்றம் இருக்காது. பணவரவு தாமதமாகும். இடமாற்றம் தாமதமாகும். கணவன் மனைவி ஒற்றுமை இருக்காது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 11, 12, 14
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நண்பர்கள் விலகிச் செல்வார்கள். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் பணம் கிடைப்பதில் சிரமம் உண்டாகும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் உண்டாகும். காதல் விவகாரங்கள் மன அமைதியைக் கெடுக்கும். பங்குச் சந்தை நஷ்டத்தைத் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
நன்மை தரும் நாட்கள்: 11, 13, 14
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அசுவதம், சித்திரை 1ம் பாதம்)
முயற்சிகளில் வெற்றி கிடைக்க தாமதமாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தள்ளிப் போகும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். தொழில் மந்த நிலையில் நடைபெறும். பதவி பறி போகும். மதிப்பு, செல்வாக்கில் சரிவு உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உடல்நலம் பாதிக்கப்படும். காதல் விவகாரம் மனதிற்கு அமைதியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 8, 11, 13
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். உயர்கல்விக்கான வாய்ப்பு தள்ளிப் போகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இல்லை. தந்தையின் உடல்நிலை பாதிக்கப்படும். திருமணம் கைகூடும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 8, 12, 13, 14
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
உடல் நலக்குறைவு உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தேவைக்கேற்ப பணவரவு உண்டு. காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். உத்தியோகத்தில் பெயர், புகழ் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 8,12,13,14
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
மன அமைதிக்குறைவு ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். வீடு, வாகனம் செலவினங்களைக் கொடுக்கும். கல்வியில் பின் தங்கிய நிலை காணப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். தேவைக்கேற்ப பணம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான வாய்ப்பு உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிமாகும். பதவி பறிபோகும். கணவன் மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். தகவல் தொடர்புத் துறையில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
நன்மை தரும் நாட்கள்: 8,11,12
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
பண விரயம் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும். அரசியலில் பதவி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். எதிர்பார்த்த தகவல்கள் வந்து சேரும்.
நன்மை தரும் நாட்கள்: 11, 14
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். பணவரவு தாராளமாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சனையைத் தரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்காது. வீடு, வாகனம் செலவினங்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டாகும். மதிப்பு, செல்வாக்கு உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும். தகவல் தொழில் நுட்பத் துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 8, 11, 13, 14
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் எல்லாமே சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திருமணம் தாமதமாகும். கணவன் மனைவி ஒற்றுமை பாதிக்கும். கல்வியில் மார்ச் 28 வரை தடைகள் காணப்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். இன்சுரன்ஸ், பி.எஃப் பணம் கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 8, 12, 14
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
