28-06-2019 முதல் 4-07-2019 வரையிலான வார இராசி பலன்கள்
வார இராசி பலன் (28-06-2019 முதல் 4-07-2019 வரை)

பணவரவு தாராளமாக இருக்கும். வீடு, வாகனம் வாங்க வேண்டிய யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். குறுகிய பிரயாணம் ஏற்படும்.
காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் ஈட்டும். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.
நன்மை தரும் நாட்கள்: 28, 29
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
பல வகைகளில் பணவரவு உண்டாக வாய்ப்புண்டு. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். சிலருக்கு வாகனம், வீடு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும்.
பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். லாட்டரி, ரேஸ் லாபத்தைத் தரும். திருமண ஒப்பந்தங்கள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். நண்பர்கள் பகைவர்களாக மாற வாய்ப்புண்டு. உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பிஎஃப் பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.
நன்மை தரும் நாட்கள்: 28, 29, 2
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பிரயாணங்கள் நன்மை தரும். இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இயங்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 30, 2
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
பண வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். நகைகள், பணம் தவறிப் போக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சிறு பிரயாணங்கள் உண்டாகும். வீடு, வாகனங்கள் செலவினங்களைக் கொடுக்கும். பயிர்த் தொழில் பலன் தராது. முதலீடுகள் சிறு லாபத்தைத் தரும்.
நண்பர்கள் உதவி கிடைக்காது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறாது. காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகம் இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. தந்தையின் உடல்நலம் பாதிக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 29, 1, 2
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும்.
மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தராது.
நன்மை தரும் நாட்கள்: 29, 30, 2
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
பண வரவு தாராளமாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வரவு மகிழ்ச்சி தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும்.
உயர் கல்வியில் வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். லாட்டரியில் பணம் கிடைக்கும். இடமாற்றம் நன்மை தரும். திருமணங்கள் தடைகளுக்குப் பின் நடைபெறும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். காதல் விவகாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். வழக்குகளில் பின்னடைவு உண்டாகும்.
நன்மை தரும் நாட்கள்: 30, 1
சந்திராஷ்டமம்: 28, 29 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்வியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். திருமணம் நடைபெறும்.
கூட்டு வியாபாரம் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக காணப்படும். இடமாற்றம் ஏற்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்காது. காதல் விவகாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தராது. முதலீடுகள் லாபத்தைத் தரும். மூத்த சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும்.
நன்மை தரும் நாட்கள்: 29, 30, 3
சந்திராஷ்டமம்: 30, 1, 2 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர் கல்விக்கான கடனுதவி கிடைக்கும். தந்தையின் உடல்நலம் பாதிக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். பணவரவு தாமதமாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்காது.
திருமணங்கள் தாமதமாகும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். சிலருக்கு பதவி பறிபோகும். மதிப்பு, செல்வாக்கு குறையும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 30, 1, 2
சந்திராஷ்டமம்: 2, 3, 4 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க நேரிடும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். உடல்நலக் குறைவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறாது. பயிர்த் தொழில் பாதிக்கப்படும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வங்கியில் இருப்பு குறையும்.
இடமாற்றம் நன்மை தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் ஏற்படும். குழந்தைகளினால் மனக்கவலை அதிகரிக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்க கடன் கிடைக்கும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். மதிப்பு, செல்வாக்கு குறையும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 28, 29
சந்திராஷ்டமம்: 3, 4 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
இடமாற்றம் நன்மை தராது. குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். பிரயாணங்களைத் தவிர்த்தல் நன்று. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உறவினர்கள் ஒதுங்கிச் செல்வர்.
காதல் விவகாரத்தில் சில ஊடல்கள் ஏற்படும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். தொழில் தொடங்க கடன் வாங்க நேரிடும். உழைக்காத பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 28, 12
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகள் லாபகரமாக இருக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு சிரமத்திற்கு மேல் கிடைக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். நண்பர்கள் பகைவர் போல் நடந்து கொள்வர். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். மதிப்பு, செல்வாக்கு உயரும். பிரயாணங்கள் நன்மையைத் தரும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். காதல் விவகாரங்கள் மனக் கசப்பைத் தரும், குழந்தைகளினால் கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்காது. பங்குச் சந்தை பலன் தராது. திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 28, 29, 1
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும்.
வீடு வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். திருமண முயற்சிகள் நன்மையில் முடியும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கல்விக்கான கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 29, 30, 1
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
