21-06-2019 முதல் 27-06-2019 வரையிலான வார இராசி பலன்கள்

வார இராசி பலன் (21-06-2019 முதல் 27-06-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.
 

வார இராசி பலன் (21-06-2019 முதல் 27-06-2019 வரை)

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.  திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வெற்றி தரும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். பதவி உயர்வு தாமதமாகும். மறைமுக எதிரிகளால் சில தொல்லைகள் உண்டாகும். 

நன்மை தரும் நாட்கள்: 22, 23, 26

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.  சிறிது உடல் நலக்குறைவு உண்டாகும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் பணம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். லாட்டரி, ரேஸ் லாபகரமாக இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். திருமணம் நிச்சயம் செய்யப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.

நன்மை தரும் நாட்கள்: 21, 23, 26

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். பயிர்த் தொழில் நல்ல பலனைத் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். காதல் விவகாரத்தில் சில மன்ஸ்தாபங்கள் உண்டாகும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்காது.

நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். கடன்கள் கட்டுக்கடங்கி காணப்படும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. 

நன்மை தரும் நாட்கள்: 23, 26

சந்திராஷ்டமம்: 21, 22  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாக வாய்ப்புண்டு. ஆடை, ஆபரணங்கள் வாங்க பணம் செலவு செய்ய நேரிடும். இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். பிரயாணங்கள் ஏற்படும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த் தொழில் நன்மை தரும்.

நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். காதல் விவகாரத்தில் சில ஊடல்கள் உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்காது. பங்குச் சந்தை நன்மை தராது. உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் லாபகரமாக இருக்காது. சிலருக்கு பதவி பறிபோகும். போட்டிகள் நன்மை தராது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது.

நன்மை தரும் நாட்கள்: 21, 26


சந்திராஷ்டமம்: 22, 23, 24  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.


சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சுப விரயங்கள் உண்டாகும். புது நண்பர் வரவு உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, இடமாற்றம் உண்டாகும். புதிய பதவிகள் கிடைக்கும். பிரயாணங்கள் நன்மை தரும். தொழில் தொடங்க வாய்ப்புகள் தேடி வரும். 

தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு சிறப்பான வாரம். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்காது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும்.

நன்மை தரும் நாட்கள்: 22, 23

சந்திராஷ்டமம்: 24, 25, 26  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

பல வகைகளில் பணவரவு உண்டாகும். ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இது வரை தடைபட்டு நின்ற காரியங்கள் துரிதமாக நடைபெறும். வங்கியில் நிதி நிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வரவு உண்டாகும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். லாட்டரி லாபம் தரும். இன்சுரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். பிரயாணங்கள் நன்மை பயக்காது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தராது.

நன்மை தரும் நாட்கள்: 21, 23, 26


சந்திராஷ்டமம்: 27, 28,29  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.


துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். உடல் நலக்குறைவு உண்டாகும். சில கடன்களை திருப்பிச் செலுத்துவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமணம் நடைபெறும். கூட்டு வியாபாரம் நல்ல லாபத்தைத் தரும்.

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் தாமதமாகும். வேலைப் பளு அதிகமாக இருக்கும். பிரயாணங்கள் நன்மை தராது. வீடு வாகனம் செலவினங்களைத் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியாக இருக்காது. சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்காது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

நன்மை தரும் நாட்கள்: 21, 22, 26

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். பணவரவு இருந்தாலும் கூட பற்றாக்குறை ஏற்படும்.

சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்காது. பங்குச் சந்தை பலன் தராது. காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தராது. வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். பயிர்கள் நோயினால் பாதிக்கப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்காது. திருமண முயற்சிகள் வெற்றி தரும். தொழில் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

நன்மை தரும் நாட்கள்: 21, 22, 26

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

முயற்சிகளில் வெற்றி கிடைக்க தாமதமாகும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வங்கியில் நிதி நிலை குறையும். வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். பிரயாணங்கள் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும்.

பங்குச் சந்தை லாபகரமாக இருக்காது. சினிமா, சங்கீதம் நன்மை தராது. போட்டிகளில் தோல்வியைத் தழுவ நேரிடும். குழந்தைகளினால் மனக்கவலை அதிகரிக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சிலர் கடன் வாங்குவார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். தொழில் சம்மந்தமான குழப்பங்கள் வரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 23, 26

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க நேரிடும். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வங்கியில் நிதிநிலை குறையும். உறவினர்கள் விலகிச்செல்வர். இடமாற்றம் நன்மையைத் தராது. பிரயாணங்கள் செலவினங்களைத் தரும். எதிர்பார்க்கும் தகவல் தாமதமாகும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். 

காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சினிமா சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். தகவல் தொடர்பு துறையினர் நலம் பெறுவர். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 23, 26

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

காரியங்களில் கடிமான முயற்சிக்குப் பின் வெற்றி கிடைக்கும். வர வேண்டிய பணம் தேவையான நேரத்தில் கிடைக்காது. குடும்பத்தில் சில கசப்பு உண்டாகும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்க கடன் கிடைக்கும்.

கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சனையைத் தரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்காது. திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 21, 22, 27

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

தொழில் சம்மந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்க தாமதமாகும். மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்படும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு பதவி பறிபோகும். நண்பர்கள் விலகிச் செல்வர். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். 

உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.  திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவில் நன்மையும் தீமையும் கலந்து காணப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 22, 23, 26

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com

From around the web