5-07-2019 முதல் 11-07-2019 வரையிலான வார இராசி பலன்கள்
வார இராசி பலன் (5-07-2019 முதல் 11-07-2019 வரை)
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த் தொழில் நல்ல பலனைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வங்கியில் நிதிநிலை உயரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் தடைகளுக்குப் பின் வெற்றி தரும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை.
நன்மை தரும் நாட்கள்: 5, 7, 8
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
பணவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். திருமணம் நிச்சயம் ஆகும். முதலீடுகள் லாபத்தைத் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பிஎஃப் பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.
நன்மை தரும் நாட்கள்:5, 7, 8
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். பிரயாணங்கள் நன்மையைத் தரும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மனமகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றகரமாக நடைபெறும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். கணவன் மனைவி உறவு சிறிது பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 5, 8, 9, 10
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். தேவைகள் அதிகரிக்கும். உறவினர்கள் விலகிச் செல்வர். இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். பிரயாணங்கள் ஏற்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறாது. கல்வியில் பின்னடைவு உண்டாகும்.
தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். புது பதவிகள் தேடி வரும். மதிப்பு செல்வாக்கு உயரும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். திருமணங்களில் தடைகள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 7, 8, 10
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
பணவரவு தாராளமாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
பிரயாணங்கள் நன்மையைத் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதுப்பதவிகள் கிடைக்கும். லாட்டரி, ரேஸ் லாபத்தைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழிலில் முதலீடுகள் செய்ய நேரிடும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். காதல் விவகாரங்களில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவி உறவு சிறிது பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 5, 7, 8, 10
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக இருக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும்.
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். லாட்டரி, ரேஸ் லாபகரமாக இருக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 5, 7, 9
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.
திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபத்தைத் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் தள்ளிப்போகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். கடன்கள் கவலையைத் தரும். காதல் விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
நன்மை தரும் நாட்கள்: 7, 8, 10
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு இருந்தாலும் கூட தேவைக்கேற்ப இருக்காது. குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் விலகிச் செல்வர். வங்கியில் நிதி நிலை குறையும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்காது.
பிரயாணங்கள் நன்மையைத் தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். தொழில் நஷ்டத்தில் இயங்கும், மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்படும். நண்பர்கள் உதவி கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 5, 9, 10
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
முயற்சிகளில் வெற்றி கிடைக்க கடுமையாக உழைக்க நேரிடும். உடல்நலக்குறைவு உண்டாகும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்காது. குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் விலகிச் செல்வர். பிரயாணம் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது.
காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்காது. குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணவரவு தாமதமாகும். திருமணங்கள் தாமதமாகும். தொழில் மந்தமான நிலையில் இயங்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இயங்கும்.
நன்மை தரும் நாட்கள்: 7, 8
சந்திராஷ்டமம்: 5 இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
வரவை மிஞ்சிய செலவினங்கள் உண்டாகும். குடும்பத்தில் நடக்கவிருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். பணவரவு தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. இடமாற்றம் நன்மை தராது. பிரயாணங்கள் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும்.
வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க கடன் கிடைக்கும். காதல் விவகாரங்களில் ஊடல்கள் ஏற்பட்டு மறையும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 9, 10
சந்திராஷ்டமம்: 6, 7, 8 இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
முயற்சிக்குப் பின் பணவரவு தாராளமாக ஏற்படும். குடும்பத்தில் குழப்பமும் மகிழ்ச்சியும் மாறி மாறி வரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். செலவினங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும்.
உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். லாட்டரி லாபத்தைத் தரும். இடமாற்றம் கவலையைத் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 6,7,8
சந்திராஷ்டமம்: 8, 9 இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
தொழில், வியாபாரம் தொடங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதுப் பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். பணவரவு தாராளமாக இருந்தாலும் கூட பற்றாக்குறை ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
உயர் கல்விக்கான கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். இடமாற்றம் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் சாதகமாக இருக்காது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் முடியும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபத்தைத் தரும். வீடு, வாகனம் வாங்க கடன் வாங்க வேண்டியது வரும்.
நன்மை தரும் நாட்கள்: 5, 6, 8, 10
சந்திராஷ்டமம்: 10, 11 இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
