26-07-2019 முதல் 1-08-2019 வரையிலான வார இராசி பலன்கள்

வார இராசி பலன் (26-07-2019 முதல் 1-08-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் குழப்பங்கள் காணப்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. பிரயாணங்கள் நன்மை தராது. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத்
 

வார இராசி பலன் (26-07-2019 முதல் 1-08-2019 வரை)

26-07-2019 முதல் 1-08-2019 வரையிலான வார இராசி பலன்கள்
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும்.  திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் குழப்பங்கள் காணப்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. பிரயாணங்கள் நன்மை தராது.

வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். உழைக்காத பணம் வந்து சேரும். அயல்நாட்டு விவகாரங்கள் குழப்பத்திற்குப் பின் வெற்றியைத் தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.

நன்மை தரும் நாட்கள்: 26, 27, 28

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் விலகிச் செல்வர். காதல் விவகாரத்தில் ஊடல்கள் ஏற்படும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. வாகனம், வீடு செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழிலுக்கு முதலீடுகள் தேவைப்படும்.

திருமண ஒப்பந்தங்கள் ஏற்படும். கூட்டு வியாபாரத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. 

நன்மை தரும் நாட்கள்: 26, 27, 28

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். வரவும் செலவும் சமமாக இருக்கும். பிரயாணங்கள் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரம் ஆகியவை நல்ல லாபம் தரும். கல்வியில் பின்னடைவு ஏற்படும்.  வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். 

காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும்.  அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. 

நன்மை தரும் நாட்கள்: 26, 17, 19

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. இடமாற்றம் தாமதமாகும்.  தகவல்கள் தாமதமாகும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். 

நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.  புதிய பதவிகள் வந்து சேரும்.  காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் கடுமையான முயற்சிக்குப் பின் வெற்றியைத் தரும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும்.

நன்மை தரும் நாட்கள்: 26, 27, 28, 29

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் ஏற்படும். சிறிது உடல்நலம் பாதிக்கப்படும். சிலருக்கு தொழில் மாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எழுத்துத் தொழில் , எடிட்டிங், விளம்பரத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். 

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமம் உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். 

நன்மை தரும் நாட்கள்: 26, 29

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க நேரிடும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். உழைக்காத பணம் வந்து சேரும். ரேஸ், லாட்டரி லாபத்தைத் தரும். பிரயாணம் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கணவன் மனைவி உறவு சிறிது பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். காதல் விவகாரங்கள் கவலையைத் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 26, 27, 29

சந்திராஷ்டமம்: 26, 27 – இந்த நாட்களில் அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 

தகவல்கள் தாமதமாகும். உத்தியோகத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். காதல் விவகாரம் மனக் கவலையைத் தரும். பங்குச் சந்தை லாபம் தராது. சினிமா, சங்கீதம்  நன்மை தராது. பங்குச் சந்தை லாபம் தராது. சினிமா சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரத்தில் சிரமத்திற்கு நன்மை உண்டாகும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில பதவிகள் தேடி வரும். எடிட்டிங், எழுத்துத் தொழில் லாபகரமாக இருக்காது. 

நன்மை தரும் நாட்கள்: 26, 27, 29

சந்திராஷ்டமம்: 27, 28, 29 – இந்த நாட்களில் அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். கல்விக்கான கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்கள் ஒதுங்கிச் செல்வர். பணப் பற்றாக்குறை ஏற்படும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா சங்கீதம் நன்மை தராது.

பங்குச் சந்தை லாபகரமாக இருக்காது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்காது.  இடமாற்றம் தாமதமாகும்.  நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், விளம்பரத் தொழில், எழுத்துத் தொழில் நன்மை பயக்காது. ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மீகப் பயணமும் உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உழைக்காத பணம் கிடைக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 26, 27, 29

சந்திராஷ்டமம்: 29, 30, 31 – இந்த நாட்களில் அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். உடல்நலக்குறைவு உண்டாகும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் விலகிச் செல்வர். இடமாற்றம் தாமதமாகும். பிரயாணம் நன்மை தராது. காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும்.

பங்குச் சந்தை லாபம் தராது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையாது.  உத்தியோகத்தில் பிரச்சினைகள் உண்டாகும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. கடன்கள் தொல்லை தரும். எதிரிகளின் தொல்லைகளைச் சமாளிக்க நேரிடும். வழக்குகளில் தேக்கநிலை  காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். 

நன்மை தரும் நாட்கள்: 26, 27

சந்திராஷ்டமம்: 31,1 – இந்த நாட்களில் அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

இடமாற்றம் அமைதியைக் கெடுக்கும். வீண் பணவிரயம் உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே பகை உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டத்தில் இயங்கும்.  ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும்.

கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். புது வாகனம் வாங்க முடியும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் முடியும். புதிய பதவிகள் தேடி வரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்குச் சந்தை லாபம் தரும். அயல்நாட்டுப் பயணம் சிறிது தாமதமாகும்.

நன்மை தரும் நாட்கள்: 26, 29

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும்.

எடிட்டிங், விளம்பரத் தொழில் , எழுத்துத் தொழில் லாபகரமாக நடைபெறும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் காணப்படும். காதல் விவகாரம் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையாது. கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். 

நன்மை தரும் நாட்கள்: 26, 29

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உயர்கல்வியில் வாய்ப்புகள் கிடைக்கும்.

உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றம் நிம்மதியைத் தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. கணவன் மனைவி உறவு பாதிக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும்.

நன்மை தரும் நாட்கள்: 27, 29

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com

 
 

From around the web