12-07-2019 முதல் 18-07-2019 வரையிலான வார இராசி பலன்கள்
வார இராசி பலன் (12-07-2019 முதல் 18-07-2019 வரை)
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த் தொழில் நல்ல பலனைத் தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.
வங்கியில் நிதி நிலை உயரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சிரமத்திற்கு மேல் வெற்றியைத் தரும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 16, 17, 18
சந்திராஷ்டமம்: 12, 13, 14 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையை உண்டாக்கும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்காது. சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும்.
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். இடமாற்றம் உண்டாகும். திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. உறவினர்கள் விலகிச் செல்வர்.
நன்மை தரும் நாட்கள்: 16, 18
சந்திராஷ்டமம்: 15, 16, 17 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க நேரிடும். உடல்நலக் குறைவு உண்டாகும். கல்வியில் பின்னடைவு ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பயிர்த் தொழில் பாதிக்கப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.
காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேறம் அடையும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 16, 18
சந்திராஷ்டமம்: 17, 18, 19 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
வாரக் கடைசியில் பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. பிரயாணங்கள் நன்மை தராது. இடமாற்றம் தாமதமாகும். வாகனத் தொழில், ரியல் எஸ்டேட் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பயிர்த் தொழில் நல்ல பலன் தரும்.
எடிட்டிங், விளம்பரத் தொழில், எழுத்துத் தொழில் பாதிக்கப்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உத்தியோகத்தில் குழப்பங்கள் உண்டாகும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 16, 17, 18
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
வாரக் கடைசியில் இடமாற்றம் உண்டாகும். பிரயாணம் ஏற்படும். செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் விலகிச் செல்வர். பணத் தட்டுப்பாடு உண்டாகும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். லாட்டரி, ரேஸ் கொஞ்சம் பலன் தரும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழிலில் புதிய முதலீடுகள் தேவைப்படும். மறைமுக எதிர்கள் சில தொல்லைகள் தருவர். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை லாபம் தராது. சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு ஏற்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 16, 17
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
முயற்சிகளில் வெற்றி கிடைக்க கடுமையாக உழைக்க நேரிடும். உடல்நலக் குறைவு உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை , ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். லாட்டரி லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கணவ்ன மனைவி உறவு பாதிக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்காது.
நன்மை தரும் நாட்கள்: 16, 18
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். தர்ம காரியங்களில் சிந்தனை செல்லும். வங்கியில் நிதி நிலை உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும்.
கடன்கள் கவலையைத் தரும். இடமாற்றம் தாமதமாகும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 16, 17, 18
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பு, உயர் கல்விக்கான உதவித் தொகை கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக நடைபெறும். உறவினர்கள் விலகிச் செல்வர். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். பணத் தட்டுப்பாடு ஏற்படும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை லாபம் தராது.
சினிமா, சங்கீதம் முன்னேற்றம் தராது. இடமாற்றம் தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. திருமண முயற்சிகள் வாரக் கடைசியில் இருந்து நன்மை தரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதுத் தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
நன்மை தரும் நாட்கள்: 16, 17, 18
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
வீண் அலைச்சல் உண்டாகும். உடல் நலம் பாதிக்கப்படும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் பாதிக்கப்படும். பயிர்த் தொழில் பலன் தராது. எடிட்டிங், விளம்பரத் தொழில், எழுத்துத் தொழில் வெகுவாகப் பாதிக்கப்படும். தரகர்கள் நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடுவர்.
குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்காது. சினிமா, சங்கீதம் பின் தங்கிய நிலையில் இருக்கும். குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.
நன்மை தரும் நாட்கள்: 16, 17
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
குடும்பத்தில் நடக்கவிருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். பணவரவு இருந்தாலும் கூட தேவைக்கேற்ப இருக்காது. இடமாற்றம் நன்மையைத் தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்காது.
காதல் விவகாரத்தில் ஊடல் ஏற்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். லாட்டரி, ரேஸ் லாபத்தைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். கடன் கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 16, 18
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புது நண்பர்களின் வரவு பிரச்சினையைத் தரும். ஆசைகள் நிறைவேறும். வங்கியில் நிதி நிலை உயரும். உத்தியோகத்தில் இடமாற்றத்துடன் பதவி உயர்வு கிடைக்கும்.
புதிய பதவிகள் கிடைக்கும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். திருமணம் நடைபெறும். உழைக்காத பணம் வந்து சேரும்.
நன்மை தரும் நாட்கள்: 16, 17, 18
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். உடல்நலம் பாதிக்கும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தள்ளிப் போகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதி நிலை உயரும்.
லாட்டரி, ரேஸ் பணம் தரும். பிரயாணங்களில் கவனம் தேவை. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 14, 17

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
