22-02-2019 முதல் 28-02-2019 வரையிலான வார இராசி பலன்கள்

வார இராசி பலன் (22-02-2019 முதல் 28-02-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பணவரவு தாராளமாக இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். நன்மை தரும் நாட்கள்: 22, 24 சந்திராஷ்டமம்: 25,26,27 –
 
வார இராசி பலன் (22-02-2019 முதல் 28-02-2019 வரை)
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
 
பணவரவு தாராளமாக இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும்.  காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். 
 
நன்மை தரும் நாட்கள்: 22, 24
 
சந்திராஷ்டமம்: 25,26,27 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
 
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரயாணங்கள் ஏற்படும்.  கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைந்து காணப்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.  சில தடைகளுக்குப் பின் திருமணம் நடைபெறும்.  அயல்நாட்டு விவகாரங்களில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டாகும்.  சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும்.
 
நன்மை தரும் நாட்கள்: 25,26,27
 
சந்திராஷ்டமம்: 28 – இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
 
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும்.  பல வகைகளில் பணவரவு உண்டாகும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். காதல் விவகாரங்களில் கவனம் தேவை. பங்குச்சந்தை நஷ்டத்தைத் தரும்.  சில கடன்களைத் திரும்பச் செலுத்த முடியும்.
 
நன்மை தரும் நாட்கள்: : 23, 24, 25
 
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
 
தடைபட்டு  நின்றிருந்த திருமணம் நடைபெறும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும்.  மதிப்பு, செல்வாக்கு உயரும்.  காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். புது நண்பர்கள் வரவு உண்டாகும்.  ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 23, 25
 
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
 
திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைத்து உத்தியோகம் கிடைக்கும். தொழிலில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியலில் பதவி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் மிகவும் சாதகமான நிலையில் காணப்படும். இன்சூரன்ஸ், பி.எஃப் பணம் கிடைக்கும். பணவரவு இருந்தாலும் கூட தேவைக்கேற்ப இருக்காது. நண்பர்களிடம் கவனமாக பழகவேண்டும்.
 
நன்மை தரும் நாட்கள்: 23, 27, 28
 
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அசுவதம், சித்திரை 1ம் பாதம்)
 
திருமணம் கைகூடும். உத்தியோகம் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான் நிலையில் இருக்கும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்க வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிரிகளினால் சில தொல்லைகள் உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. 
 
நன்மை தரும் நாட்கள்: 22, 24, 27
 
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
 
வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். திருமணம் கைகூடும். காதல் விவகாரங்கள் மிகவும் மகிழ்ச்சியைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். 
 
நன்மை தரும் நாட்கள்: 22, 23, 24, 25
 
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)
 
உடல்நலம் பாதிக்கப்படும். வேலை தேடுவோர்க்க்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். கடன்கள் ஏற்பட வாய்ப்புண்டு. காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் காணும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க வேண்டி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 22, 25, 27
 
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
 
இடமாற்றம் உண்டாகும். கல்வியில் பின்னடைவு ஏற்படும். தாயாரின் உடல்நிலை பாதிக்கப்படும். முயற்சிகளில் வெற்றி தாமதமாகக் கிடைக்கும். பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். 
 
நன்மை தரும் நாட்கள்: 26, 27, 28
 
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
 
வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உழைக்காமல் பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எஃப் பணம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடன்கள் கிடைக்கும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். தகவல்கள் தாமதமின்றி கிடைக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 22, 23, 26, 27
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
 
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளாமாக இருக்கும். புது நண்பர்கள் வந்து சேருவார்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. காதல் விவகாரங்கள் பிரச்சனையைத் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். 
 
நன்மை தரும் நாட்கள்: 22, 23, 25, 26
 
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
 
அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். பணம் பல வகைகளில் வந்து சேரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். கணவன் மனைவியிடையே மனஸ்தாபங்கள் உண்டாகும். லாட்டரி, ரேஸ் போன்றவைகள் மூலம் பண வரவு உண்டாகும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. காதல் கசக்கும். பங்குச்சந்தை லாபம் தராது.
 
நன்மை தரும் நாட்கள்: 23, 25, 26
 
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com

From around the web