வார இராசிபலன்கள் ஆகஸ்ட் 16 – 22 … காதல் யாருக்கெல்லாம் இனிக்கும் ?
வார இராசி பலன் (16-08-2019 முதல் 22-08-2019 வரை)
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
மகிழ்ச்சியான வாரம். கேளிக்கைகளில் ஈடுபாடு அதிகமாகும். ஒரு சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.
வழக்குகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் முடியும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். கடன்கள் தொல்லை நீங்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும்.
நன்மை தரும் நாட்கள்: 17, 18, 20
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் சொந்த ஊருக்கு மாற்றல் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கல்விக்கான கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் வரவு மகிழ்ச்சி தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும்.
சினிமா, சங்கீதம் லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த் தொழில் லாபம் தரும். நிலத்தகராறு மறையும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் கடுமையான முயற்சிக்குப் பின் வெற்றி தரும்.
நன்மை தரும் நாட்கள்: 17, 20, 22
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் ஆனந்தம் பொங்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பயிர்த் தொழில் லாபகரமாக நடைபெறும். விளம்பரத் தொழில் மதிப்பைத் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.
சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். தொழில் லாபகரமாக நடைபெறும். கூட்டு வியாபாரத்தில் மனக்கசப்பு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 16, 17, 20
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்த்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவி செய்ய ஓடோடி வருவர். வங்கியில் நிதிநிலை உயரும். பிரயாணங்கள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.கல்வியில் முன்னேற்றம் காணப்படும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
ஆசைகள் நிறைவேறும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும்
நன்மை தரும் நாட்கள்: 21, 22
சந்திராஷ்டமம்: 16, 17, 18 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். உடல்நலம் நன்றாக இருக்கும். பலவகைகளில் பணவரவு இருந்தாலும் கூட செலவினங்கள் அதிகமாக காணப்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. பணத்தை முதலீடு செய்ய நேரிடும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
பிரயாணங்கள் நன்மை தரும். தரகுத் தொழில், எடிட்டிங், எழுத்துத் தொழில் லாபகரமாக இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். பயிர்த் தொழில் நல்ல பலன் தரும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். காதல் விவகாரத்தில் சில ஊடல்கள் ஏற்படும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 16, 22
சந்திராஷ்டமம்: 19, 20, – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணவசதி தாராளமாக இருந்த போதிலும், தேவைக்கேற்ப இருக்காது. உறவினர்கள் ஒதுங்கிச் செல்வர். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்காது.
பிரயாணங்கள் நன்மை தராது. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நிம்மதியைக் கெடுக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். திருமண ஒப்பந்தங்கள் ஏற்படும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தராது. சினிமா, சங்கீதம் பலன் தராது.
நன்மை தரும் நாட்கள்: 17, 18, 20
சந்திராஷ்டமம்: 21, 22 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். காதல் விவகாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்காது. சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 16, 18, 20
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
மதிப்பு, செல்வாக்கு உயரும். தொழில் அமோகமாக நடைபெறும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்கும். பங்குச் சந்தை லாபகரமாக நடைபெறும்.
சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். இடமாற்றம் தாமதமாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேராது. பிரயாணங்கள் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் மந்தமான நிலையில் இயங்கும். எடிட்டிங், தரகர் தொழில் லாபம் தராது. உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதமான நிலையில் இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 16, 18, 20
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
இடமாற்றம் உண்டாகும். உடல்நலக் குறைவு உண்டாகும். கல்வியில் பின்னடைவு ஏற்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழிலில் முதலீடுகள் தேவைப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் உதவிகள் கிடைக்காது. பிரயாணங்கள் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். எடிட்டிங், விளம்பரத் தொழில், எழுத்துத் தொழில் பாதிக்கப்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.
சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்குச் சந்தை லாபகரமாக இயங்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டுத் தொழிலில் குழப்பங்கள் காணப்படும். பதவி பறி போகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 21, 22
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
உடல்நலம் பாதிக்கும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். வங்கியில் நிதிநிலை குறையும். இடமாற்றம் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். விளம்பரத் தொழில் நன்மை பயக்கும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும்.
கல்வியில் பின்னடைவு ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலம் பாதிக்கும். சங்கீதம் நன்மை பயக்காது. காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பதவி பறிபோகும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்காது. ரேஸ், லாட்டரி நஷ்டத்தைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.
நன்மை தரும் நாட்கள்: 18, 20
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். வங்கியில் நிதிநிலை உயரும். நண்பர்களினால் நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். பிரயாணம் நன்மை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும்.
புதிய பதவிகள் கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும்.கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெறுவர். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 16, 18, 22
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
தர்ம சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
உழைக்காத பணம் வந்து சேரும். பிஎப், இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். திருமணங்கள் கைகூடும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 16, 18, 20
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
