வார இராசி பலன்கள் 9-08-2019 முதல் 15-08-2019 வரை..
வார இராசி பலன் (9-08-2019 முதல் 15-08-2019 வரை)
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
கேளிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்த வாரம். கடன்களைத் திருப்பிச் செலுத்தி விடுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். ரியல் எஸ்டேட், பயிர்த்தொழில் சிறப்பாக நடைபெறும். பயிர்த் தொழில் லாபம் தரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சிறிது தாமதத்திற்குப் பின் வெற்றியைத் தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. முதலீடுகளில் லாபம் கிடைக்காது.
நன்மை தரும் நாட்கள்: 12, 13, 15
சந்திராஷ்டமம்: 9, 10 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். சிறிது உடல்நலம் பாதிக்கப்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.
பங்குச்சந்தை லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில் லாபகரமாக நடைபெறும். திருமணங்கள் கூடி வரும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபப் பங்குத் தொகை வந்து சேரும். கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.தொழில் மந்தமாக நடைபெறும்.
நன்மை தரும் நாட்கள்: 10, 14
சந்திராஷ்டமம்: 11, 12, 13 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதி நிலை உயரும். பிரிந்து போன உறவினர்கள் வந்து சேருவர். இடமாற்றம் நன்மையைத் தரும். பிரயாணம் லாபகரமாக அமையும்.
எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா,சங்கீதம் லாபகரமாக இருக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்குவ் வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பங்கள் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.
நன்மை தரும் நாட்கள்: 10,12, 13
சந்திராஷ்டமம்: 13, 14, 15 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
பணவரவு தாராளமாக இருக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். விலகிச் சென்ற உறவினர் வந்து சேருவர். பிரயாணங்கள் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில் விளம்பரத் தொழில் லாபகரமாக அமையும்.
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நல்ல லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பரிசுகள் கிடைக்கும். தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு பாதிக்கும்.
நன்மை தரும் நாட்கள்:11, 12, 13
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
இடமாற்றம் உண்டாகும். உடல்நலக்குறைவு ஏற்படும். பலவகைகளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் ஆனந்தம் தவழும். வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். புது நண்பர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். ஆசைகள் நிறைவேறும். நேர்முகத் தேர்வில்
வெற்றி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும்.
எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில் லாபகரமாக நடைபெறும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். தரகர் தொழில் அமோகமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவி உறவு சிறிது பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 10, 12, 13
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். நீண்டநாள் ஆசை நிறைவேறும். பணவரவு தாராளமாக இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களிடையே ஏற்பட்ட கசப்பு மறையும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். இன்சூரன்ஸ், பிஎஃப் பணம் கிடைக்கும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதம் பின்னடைவு உண்டாகும்.
நன்மை தரும் நாட்கள்: 10, 12, 14
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். உழைக்காத பணம் வந்து சேரும். தர்ம காரியங்களில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களிடையே ஏற்பட்ட விரிசல் மறையும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். வங்கியில் நிதி நிலை உயரும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணங்களில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். தொலை தூரப் பயணம் ஏற்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும்.
நன்மை தரும் நாட்கள்: 10, 11, 13
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வரவு மகிழ்ச்சி தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சி தரும். சினிமா, சங்கீதம் லாபம் தரும்.
பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். இடமாற்றம் தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் மந்தமாக நடைபெறும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பிஎஃப் பணம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். சிலருக்கு அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். சிலர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவர்.
நன்மை தரும் நாட்கள்: 10, 11, 13
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். பதவிகள் தேடி வரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். இடமாற்றம் தாமதமாகும்.
எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில் லாபகரமாக இருக்காது. காதல் விவகாரத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முதலீடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். நண்பர்கள் பகைவர்களாக மாறுவர். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாகவே இருக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 11, 12, 13
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க நேரிடும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். உறவினர்கள் விலகிச் செல்வர். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் ஏற்படும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது.
எடிட்டிங், எழுத்துத் தொழில் நன்மை தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கல்வியில் பின்னடைவு ஏற்படும். நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். பயிர்த் தொழில் நஷ்டம் தரும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். பங்குச் சந்தை லாபம் ஈட்டும். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். லாட்டரி லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான நிதியுதவி கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 10, 12, 15
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பணவரவு பலவகைகளில் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். ஆசைகள் நிறைவேறும். வங்கியில் நிதி நிலை உயரும். எடிட்டிங், எழுத்துத் தொழில் பெயர், புகழைத் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பிரயாணங்கள் நன்மை தரும்.
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழிலில் புது ஒப்பந்தங்கள் ஏற்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 11, 13, 15
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
மதிப்பு, செல்வாக்கு உயரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான சூழ்நிலை இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். வங்கியில் நிதி நிலை உயரும்.
ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ் பிஎப் பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும்.
நன்மை தரும் நாட்கள்: 10, 11, 15
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
