வார இராசி பலன்கள் 2-08-2019 முதல் 8-08-2019 வரை
வார இராசி பலன் (2-08-2019 முதல் 8-08-2019 வரை)
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதி நிலை உயரும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டுத் தொழில் நல்ல லாபம் தரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.
உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் மிகுந்த முயற்சிகளுக்குப் பின் வெற்றி தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை.
நன்மை தரும் நாட்கள்: 2, 3, 4
சந்திராஷ்டமம் : 8 – இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வேலை சம்மந்தமான பிரயாணங்கள் ஏற்படும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். லாட்டரி ரேஸ் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். திருமண ஒப்பந்தங்கள் ஏற்படும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. நண்பர்களிடையே பிரச்சினை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 2, 3, 4
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
பணவரவு தாராளமாக இருக்கும். முயற்சிகள் எல்லாம் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். பிரிந்து போன உறவினர்கள் வந்து சேருவர். இடமாற்றம் நன்மையைத் தரும். பிரயாணம் லாபகரமாக அமையும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பங்கள் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.
நன்மை தரும் நாட்கள்: 2, 3, 5
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
பல வகைகளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்களின் வருகை உற்சாகத்தைத் தரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி பொருட்கள் வாங்கி மகிழ்வர். இடமாற்றம் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். பிரயாணம் ஏற்படும். காணாமல் போன பொருட்கள் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். குழந்தைகளினால் மகிழ்ச்சி உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 3, 4, 6
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். உடல்நலம் பாதிக்கப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் விலகிச் செல்வர். நண்பர்கள் பகைவர்களாக மாறுவர். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் உண்டாகும். ஆசைகள் நிராசையாக மாறும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் பாதிக்கப்படும்.
விளம்பரத் தொழில் நஷ்டம் தரும். பிரயாணங்கள் நன்மை தராது. கல்வியில் பின்னடைவு உண்டாகும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தைத் தரும். காதல் விவகாரங்கள் பிரச்சனையைத் தரும். கடன்கள் தொல்லை தரும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 2, 3
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். நினைத்தது நடக்கும். ஆசைகள் நிறைவேறும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வங்கியில் நிதிநிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும்.
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி லாபகரமாக இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். லாட்டரி, ரேஸ் லாபகரமாக இருக்கும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். பிரயாணம் நன்மையைத் தரும். தகவல்கள் தாமதமின்றி கிடைக்கும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைக் கொடுக்கும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும்.
நன்மை தரும் நாட்கள்: 2, 3, 5
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். காதல் விவகாரத்தில் ஊடல் உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். நண்பர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் நிறைவேறும்.
நன்மை தரும் நாட்கள்: 3, 5, 6
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
அயல்நாட்டில் வேலை கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரஙகள் எல்லாமும் சாதகமான நிலையில் இருக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே சில மனக்கசப்பு உண்டாகும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. இடமாற்றம் தாமதமாகும்.
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். தரகர் தொழிலில் வரவேண்டிய கமிஷன் பணம் வராது. பிரயாணங்கள் நன்மை தராது. இடமாற்றம் தாமதமாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மையைத் தரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
நன்மை தரும் நாட்கள்: 3, 4, 5, 6
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
நான்கு கிரகங்கள் எட்டாம் வீட்டில் இருப்பதினால் இந்த வாரத்தை சிறப்பித்து கூறமுடியாது. முயற்சிகளில் தடைகள் காணப்படும். உடல்நலக் குறைவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்காது. குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டாகும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். இடமாற்றம் தாமதமாகும். பிரயாணம் நன்மை தராது. தகவல்கள் தாமதமாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதம் நன்மை தராது.
பங்குச் சந்தை நஷ்டத்தைத் தரும். கடன்கள் கவலையைத் தரும். உத்தியோகத்தில் குழப்பங்கள் உண்டாகும். நண்பர்கள் விலகிச் செல்வர். சில உழைக்காத பணம் வந்து சேர வாய்ப்புண்டு. வழக்குகள் வெற்றியைத் தராது. கணவன் மனைவி ஒற்றுமை இருக்காது. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் நன்மை தராது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.
நன்மை தரும் நாட்கள்: 3, 4
சந்திராஷ்டமம் : 2 – இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
வருமானத்திற்கு அதிகமான செலவு உண்டாகும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்கள் உதவிக்கு வர மாட்டார்கள். இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். எடிட்டிங், விளம்பரம், தரகர் தொழில்கள் வெகுவாகப் பாதிக்கப்படும்.
கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான உதவித் தொகை கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.
நன்மை தரும் நாட்கள்: 2, 3, 6
சந்திராஷ்டமம் : 2, 3, 4 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகளில் கடுமையான உழைப்பிற்குப் பின் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் நடக்கவிருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். உறவினர்களும் நண்பர்களும் விலகிச் செல்வர். பணத் தட்டுப்பாடு வரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் சிறப்பாக நடைபெறும்.
புதிய பதவிகள் தேடிவரும். பிரயாணம் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை லாபத்தைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 7, 8
சந்திராஷ்டமம் : 4, 5, 6 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் குழப்பங்கள் உண்டாகும். மதிப்பை காப்பாற்ற சிரமப்பட வேண்டியது வரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும்
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். ஆன்மீகத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் அடிக்கடி விடுமுறை எடுக்க நேரிடும்.
நன்மை தரும் நாட்கள்: 2, 4, 6
சந்திராஷ்டமம் : 6,7, 8 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
