ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்!
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வீடு, வாகனம் தொல்லைகளைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். தொழில் மந்தமான நிலையில் நீடிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது.
எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் போட்டிகள் காணப்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாகும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். சில கடன்கள் தொல்லை தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.
சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். சினிமா, சங்கீதம் முனேற்றம் தராது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும்.
