26-04-2019 முதல் 2-05-2019 வரையிலான வார இராசி பலன்கள்

வார இராசி பலன் (26-04-2019 முதல் 2-05-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பணவரவு தாராளமாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். சுப விரயம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். ஒரு சிலர் கடன் வாங்க வேண்டியது வரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.
 
வார இராசி பலன் (26-04-2019 முதல் 2-05-2019 வரை)
26-04-2019 முதல் 2-05-2019 வரையிலான வார இராசி பலன்கள்

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

பணவரவு தாராளமாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். சுப விரயம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும்.

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். ஒரு சிலர் கடன் வாங்க வேண்டியது வரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தொழில்கள் பாதிப்படையும்.

நன்மை தரும் நாட்கள்: 26, 28, 2

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

மதிப்பு, செல்வாக்கு உயரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். பல வகைகளில் பணவரவு உண்டாகும். ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்கும்.

குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஒரு சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது.

நன்மை தரும் நாட்கள்: 28, 29

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

புதிய பதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் சாதகமாக வந்து சேரும். லாட்டரி, ரேஸ் லாபத்தைத் தரும். இடமாற்றம் நன்மையைத் தரும்.

காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். ஒரு சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். நண்பர்கள் பகைவர்களாக மாற வாய்ப்புண்டு. திருமணம் தாமதமாகும். கணவன் மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும். உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகமாக இருக்கும். தொழில் மந்தமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 29, 2

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதி நிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். இடமாற்றம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். கடன்கள் கவலையைத் தரும். வழக்குகளில் பின்னடைவு உண்டாகும்.

நன்மை தரும் நாட்கள்: 26, 28

சந்திராஷ்டமம்: 29, 30, 1 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

அயல்நாட்டு பிரயாணம் உண்டாகும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தையுடன் நல்ல இணக்கம் உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். நண்பர்கள் பகைவர்களாக மாறுவார்கள். உறவினர்கள் உபத்திரம் தருவர். ஆசைகள் நிராசையாகும். பிரயாணங்கள் நன்மையைத் தராது.

உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் மந்த நிலையில் இயங்கும். மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்படும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதம் நஷ்டத்தில் இயங்கும். கடன்கள் கவலையைத் தரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. திருமணம் தாமதமாகும். கணவன் மனைவி ஒற்றுமை பாதிக்கப் படும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் தோல்வி ஏற்படும்.

நன்மை தரும் நாட்கள்: 26, 28

சந்திராஷ்டமம்: 1,2, 3 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அசுவதம், சித்திரை 1ம் பாதம்)

மன அமைதி குறைந்து காணப்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்காது. வியாபாரத்தில் போட்டிகள் காணப்படும். வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். அயல்நாடு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்படும்.

சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். பயிர்த் தொழில் நஷ்டத்தைத் தரும். ரியல் எஸ்டேட் பாதிக்கப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். திருமணம் தாமதமாகும். காதல் தோல்வி உண்டாகும்.

நன்மை தரும் நாட்கள்: 27, 29

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

உடல் நலக்குறைவு உண்டாகும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும். ஒரு சில உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும்.

கூட்டு வியாபாரத்தில் லாபப் பங்கு கிடைக்கும். இடமாற்றம் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் தோல்வி ஏற்படும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஏற்படும். வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். விடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

நன்மை தரும் நாட்கள்: 26, 27, 2

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

எதிரிகளின் தொல்லைகள் சாதகமான முடிவுக்கு வரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் பகைவர்களாக மாறுவர். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதம் நஷ்டத்தைத் தரும். பங்குச் சந்தை நஷ்டத்தில் இயங்கும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும்.

பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க இயலும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 26, 27, 28

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

முயற்சிகளில் மிகுந்த சிரமத்திற்கு மேல் வெற்றி கிடைக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். பயிர்த் தொழில் நஷ்டத்தைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபத்தைத் தராது. எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் கைகூடும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வு உண்டாகும். புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 26, 29, 2

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அண்டை வீட்டுக் காரர்களுடன் கவனமாக நடந்து கொள்வது நல்லது. கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

தாயாரினால் நன்மைகள் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 28, 2

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். முயற்சிகள் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சில நண்பர்கள் பிரிதலும், புது நண்பர்களின் வரவும் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வு உண்டாகும். புது பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும்.

பிரயாணங்கள் நன்மையைத் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 26, 28, 2

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

முயற்சிகளில் வெற்றி கிடைக்காது. மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்படும். பதவி பறிபோகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். வீடு, வாகனம் வாங்க வாய்ப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 26, 28, 2

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com

From around the web