சார்வரி வருட பலன்கள்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மைகள் தேடி வரும்! – 80/100
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். அடிக்கடி பிரயாணம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும்.
காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் நன்மை தரும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை ஏற்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பயிர்த் தொழில் லாபம் தராது. கல்வியில் பின்னடைவு உண்டாகும்.
வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். முதலீடுகள் லாபத்தைத் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். எதிர்பாராத பண வரவும் உண்டு. மதிப்பு, செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.
கேது திசை புதன் புத்தி குரு அந்தரம் 13-4-2020 முதல் 7-5-2020 வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். குழந்தைகளினால் நன்மைகள் ஏற்படும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும்.
கேது திசை புதன் புத்தி சனி அந்தரம் 7-5-2020 முதல் 3-7-2020 வரை நடைபெறும் இந்த காலக்கட்டத்தில் கல்வியில் பின்னடைவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். பயிர்த் தொழில் நன்மை தராது.
சுக்கிரதிசை, சனி புத்தி சுக்கிர அந்தரம் 3-7-2020 முதல் 22-1-2021 வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டத்தில் திருமணம் நடைபெறும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். சில முதலீடுகள் செய்ய நேரிடும்.
சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சூரிய அந்தரம் 22-1-2021 முதல் 24-3-2021 வரை நடைபெறும். அப்போது மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். உடல்நலம் பாதிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும்.
சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சந்திர சுந்தரம் 24-3-2021 முதல் ஆண்டு முடியும் வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டத்தில் அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். தந்தையின் சொத்துக்கள் வந்து சேரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். ஒப்பந்தக்காரர்கள் லாபம் அடைவர்.
பரிகாரம் : தேய்பிறை அஷ்டமி அன்று விரதமிருந்து கால பைரவரை பூஜித்து வர எல்லாவித நன்மைகளும் தேடிவரும்.

