சார்வரி வருட பலன்கள்: ரிஷப ராசிக்காரர்கள் கவனமாக இருங்கள்! – 50/100

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்) உடல்நலம் நன்றாக இருக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வு வெற்றியைத் தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பயிர்த் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். மனக்கவலை அதிகரிக்கும்.
 

சார்வரி வருட பலன்கள்: ரிஷப ராசிக்காரர்கள் கவனமாக இருங்கள்! – 50/100ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வு வெற்றியைத் தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பயிர்த் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். மனக்கவலை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 

சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தராது.  மறைமுக எதிரிகளின் தொல்லை ஏற்படும். 

உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்கள் தொல்லை தரும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்மந்தமான முதலீடுகள் செய்ய நேரிடும். உயர்கல்வியில் பின்னடைவு உண்டாகும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். 

கேது திசை 3-7-2020 வரை நடைபெறுகிறது. கேது 8மிடத்தில் இருப்பதினால் உடல்நலம் பாதிக்கும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். பயிர்த் தொழிலில் நஷ்டம் உண்டாகும். சில கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். நண்பர்கள் எதிரியாக மாறுவர். 

சுக்கிரதிசை, சனி புத்தி சுக்கிர அந்தரம் 3-7-2020 முதல் 22-1-2021 வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டம் சிறப்பாக இருக்காது. உடல்நலம் பாதிக்கும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். கடன்கள் தொல்லை தரும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும் கூட்டுத் தொழிலில் பிரிவினை உண்டாகும்.

சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சூரிய அந்தரம் 22-1-2021 முதல் 24-3-2021 வரை நடைபெறுவதால், இந்தக் காலக்கட்டத்தில் வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். பயிர்த் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும்.

சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சந்திர சுந்தரம் 24-3-2021 முதல் ஆண்டு முடியும் வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டடத்தில் உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடத்திற்கு இடமாற்றம் உண்டாகும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. மனக்கவலை அதிகரித்து காணப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. 

பரிகாரம் :  வெள்ளிக்கிழமை தோறும் பராசக்தியை வழிபட்டும் சௌந்தர்ய லஹரி, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்தும் வர பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

சார்வரி வருட பலன்கள்: ரிஷப ராசிக்காரர்கள் கவனமாக இருங்கள்! – 50/100

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web