சார்வரி வருட பலன்கள்: மிதுன ராசிக்காரர்கள் சமாளித்து விடலாம்! – 60/100

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்) உடல்நலம் பாதிக்கும். சில பதவிகள் பறிபோகும். தொழில் நஷ்டத்தில் இயங்கும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். பயிர்த் தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை நடைபெறும்.
 

சார்வரி வருட பலன்கள்: மிதுன ராசிக்காரர்கள் சமாளித்து விடலாம்!  – 60/100மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கும். சில பதவிகள் பறிபோகும். தொழில் நஷ்டத்தில் இயங்கும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். பயிர்த் தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை நடைபெறும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். 

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். பங்குச் சந்தை நன்மை தராது. ரேஸ், லாட்டரி நஷ்டம் தரும். காதல் விவகாரத்தில் மோதல் உண்டாகும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பிரச்சினை உண்டாகும். சில கடன்கள் தொல்லை தரும். நண்பர்களிடையே பகைமை உண்டாகும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். வழக்குகள் வெற்றியைத் தராது. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும்.

கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத் தொழிலில் குழப்பங்கள் எற்படும். தொழில் நஷ்டத்தில் இயங்கும் . பதவிகள் பறிபோகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதாமகும். மதிப்பு செல்வாக்கு குறையும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். ஒப்பந்தக்காரர்கள் பிரச்சினையை சந்திக்க நேரிடும். தந்தையின் உடல்நலம் பாதிக்கும். 

கேது திசை புதன் புத்தி குரு அந்தரம் 13-4-2020 முதல் 7-5-2020 வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டத்தில் குழப்பங்கள் அதிகரித்து காணப்படும். அமைதி குறையும். உடல்நலம் பாதிக்கும். தொழிலில் முடக்கம் ஏற்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டுத் தொழிலில் குழப்பம் ஏற்படும். 

கேது திசை புதன் புத்தி சனி அந்தரம் 7-5-2020 முதல் 3-7-2020 வரை நடைபெறும். மனக்கவலை அதிகரிக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். 

சுக்கிரதிசை, சனி புத்தி சுக்கிர அந்தரம் 3-7-2020 முதல் 22-1-2021 வரை நடைபெறும். இடமாற்றம் உண்டாகும். சினிமா, சங்கீதத்தில் நஷ்டம் ஏற்படும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். 

சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சூரிய அந்தரம் 22-1-2021 முதல் 24-3-2021 வரை நடைபெறுவதால், எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.  இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். 

சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சந்திர சுந்தரம் 24-3-2021 முதல் ஆண்டு முடியும் வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டடத்தில் பணவரவு உண்டாகும். உழைக்காத பணமும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்புண்டு. கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். 

பரிகாரம் : புதன்கிழமை தோறும் பெருமாளை வழிபட்டு விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வர நன்மைகள் தேடி வரும்.

சார்வரி வருட பலன்கள்: மிதுன ராசிக்காரர்கள் சமாளித்து விடலாம்!  – 60/100

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web