சார்வரி வருட பலன்கள்: மேஷ ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி – 70/100
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
பொதுவாக இந்த ஆண்டு நன்மையான பலன்களைத் தரும். பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உடல்நலம் நன்றாக இருக்கும். மனைவி பெயரில் சில முதலீடுகள் செய்வீர்கள். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்து வந்த கடன்களிலிருந்து மீண்டு வருவீர்கள். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் புரிவோர் நன்மை அடைவர். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.
சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். பங்குச் சந்தையில் நன்மை கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். புதிய தொழில் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
கேது திசை, புதன் புத்தி குரு அந்தரம் 13-4-2020லிருந்து 7-5-2020 வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டத்தில் சிறிது உடல்நலக்குறைவு ஏற்பட்டு குணமடைவதற்கான வாய்ப்பு உண்டு. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
கேது திசை, புதன் புத்தி சனி அந்தரம் 7-5-2020 லிருந்து 3-7-2020 வரை நடைபெறுவதால், இந்தக் காலக்கட்டத்தில் எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
சுக்கிரதிசை, சனி புத்தி சுக்கிர அந்தரம் 3-7-2020 முதல் 22-1-2021 வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சூரிய அந்தரம் 22-1-2021 முதல் 24-3-2021 வரை நடைபெறுவதால், இந்தக் காலக்கட்டத்தில் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும்.
சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சந்திர சுந்தரம் 24-3-2021 முதல் ஆண்டு முடியும் வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டடத்தில் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும்.
பரிகாரம் : செவ்வாய் கிழமை தோறும் முருகப் பெருமானை வழிபட்டு வர ஏற்றமிகு வாழ்வு அமையும்.

