சார்வரி வருட பலன்கள்: மகர ராசிக்காரர்களுக்கு வளம் பெருகும்! – 75/100

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்) குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் ஏற்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை உண்டாகும். ரியல் எஸ்டேட்,
 

சார்வரி வருட பலன்கள்: மகர ராசிக்காரர்களுக்கு வளம் பெருகும்! – 75/100மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

 
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் ஏற்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
 
சில குடும்பங்களில் பாகப்பிரிவினை உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் தரும். ரேஸ் லாட்டரி லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
 
மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. திருமணங்கள் தடைக்குப் பின் நடைபெறும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். 
 
கேது திசை புதன் புத்தி குரு அந்தரம் 13-4-2020 முதல் 7-5-2020 வரை நடைபெறும். இடமாற்றம் உண்டாகும். பணச்செலவு உண்டாகும். தகவல்கள் தாமதத்திற்குப் பின் வந்து சேரும். 

கேது திசை புதன் புத்தி சனி அந்தரம் 7-5-2020 முதல் 3-7-2020 வரை நடைபெறும். நீண்டநாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். குடும்பத்தில் நடைபெற இருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். 

சுக்கிரதிசை, சனி புத்தி சுக்கிர அந்தரம் 3-7-2020 முதல் 22-1-2021 வரை நடைபெறும்.  இது ஒரு யோகமான காலக்கட்டமாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கடன்கள் அடைபடும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

22-1-2021 முதல் 24-3-2021 வரை சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சூரிய அந்தரம்  நடைபெறும். இந்த காலக்கட்டத்தில் கவலைகள் அதிகரித்து காணப்படும். காரியத் தடைகள் ஏற்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உடல்நலத்தில் கவனம் தேவை. சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். வீடு, நிலம் வாங்கும் போது வில்லங்களை சரிபார்த்து வாங்க வேண்டும்.

24-3-2021 முதல் ஆண்டு முடியும் வரை சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சந்திர சுந்தரம்  நடைபெறும். இந்தக் காலக்கட்டடத்தில் தடைபட்டு நின்றிருந்த திருமணம் நடைபெறும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் காணப்படும்.

பரிகாரம் : சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கு எள் விளக்கு ஏற்றிவர சங்கடங்கள் தீரும். 

சார்வரி வருட பலன்கள்: மகர ராசிக்காரர்களுக்கு வளம் பெருகும்! – 75/100

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web