சார்வரி வருட பலன்கள்: கடக ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு! – 85/100

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்) உடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பங்களில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீடு, நிலம்,
 

சார்வரி வருட பலன்கள்:  கடக ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு!  – 85/100கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பங்களில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும்.

பயிர்த் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். முதலீடுகள் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். 

கேது திசை புதன் புத்தி குரு அந்தரம் 13-4-2020 முதல் 7-5-2020 வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டத்தில் சிறிது உடல்நலம் பாதிக்கும்.  கணவன் மனைவி உறவு நன்றாக இருக்காது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.

கேது திசை புதன் புத்தி சனி அந்தரம் 7-5-2020 முதல் 3-7-2020 வரை நடைபெறும்.  இந்த காலக்கட்டத்தில் மனக்கவலை அதிகரித்து காணப்படும். தொழில் முடக்கம் ஏற்படும். சில கடன்கள் கவலை தரும். கூட்டு வியாபாரத்தில் லாபப் பங்கு வந்து சேரும். 

சுக்கிரதிசை, சனி புத்தி சுக்கிர அந்தரம் 3-7-2020 முதல் 22-1-2021 வரை நடைபெறும். இந்த காலக்கட்டத்தில் நல்ல பணவரவைத் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். பயிர்த் தொழில் லாபம் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். 

சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சூரிய அந்தரம் 22-1-2021 முதல் 24-3-2021 வரை நடைபெறுவதால், எடிட்டிங், எழுத்துத் தொழில், எதிர்பார்க்கும்இனங்களிலிருந்து பண வரவு உண்டாகும்.புதிய பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும்.  

சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சந்திர சுந்தரம் 24-3-2021 முதல் ஆண்டு முடியும் வரை நடைபெறும். சிறிது உடல்நலம் பாதிக்கும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 

பரிகாரம் : திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டு வர ஏற்றமிகு வாழ்வு அமையும்.

சார்வரி வருட பலன்கள்:  கடக ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு!  – 85/100

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web