சார்வரி வருட பலன்கள்: தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றமடையும்! – 85/100

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். பல வகைகளில் பணவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி
 

சார்வரி வருட பலன்கள்: தனுசு  ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றமடையும்! – 85/100

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும்.

பல வகைகளில் பணவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும், 

தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். ஆசைகள், கனவுகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நல்ல லாபம் தரும். புதுத் தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.

கேது திசை புதன் புத்தி குரு அந்தரம் 13-4-2020 முதல் 7-5-2020 வரை நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அயல்நாடுகள் மூலமாக நன்மைகள் தேடி வரும். தந்தை வழி சொத்துக்கள் வந்து சேரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். 

கேது திசை புதன் புத்தி சனி அந்தரம் 7-5-2020 முதல் 3-7-2020 வரை நடைபெறும். இந்த காலக்கட்டத்தில் எதிர்பாராத பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். 

சுக்கிரதிசை, சனி புத்தி சுக்கிர அந்தரம் 3-7-2020 முதல் 22-1-2021 வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டத்தில் வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கனவுகள், ஆசைகள் நிறைவேறும்.

சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சூரிய அந்தரம் 22-1-2021 முதல் 24-3-2021 வரை நடைபெறும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.

சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சந்திர சுந்தரம் 24-3-2021 முதல் ஆண்டு முடியும் வரை நடைபெறும். இது ஒரு குழப்பமான காலக்கட்டமாகும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உடல்நலம் பேண வேண்டும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும்.

பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட கோடி நன்மைகள் தேடி வரும். 

சார்வரி வருட பலன்கள்: தனுசு  ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றமடையும்! – 85/100

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web