இராகு கேது பெயர்ச்சி பலன்கள் – தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு..

இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் – தனுசு, மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) ராகு பலன்கள் ராகு ஏழாமிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. திருமணம் நடைபெறும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அரசியலில் புது பதவி கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். தொழிலில் போட்டிகள் காணப்பட்டாலும் கூட
 
இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் – தனுசு, மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
 
ராகு பலன்கள்
 
ராகு ஏழாமிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. திருமணம் நடைபெறும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அரசியலில் புது பதவி கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். தொழிலில் போட்டிகள் காணப்பட்டாலும் கூட சிறப்பாகவே நடைபெறும். அயல்நாடு விவகாரங்கள் சாதகமாகவே இருக்கும்.
 
கேது பலன்கள்
 
கேது ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த் தொழில் சிறப்பாக நடைபெறும். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடைபெறும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.  காதல் விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. பங்குச் சந்தை லாபகரமாக இருக்காது. 
 
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வர நல்ல திருப்பம் உண்டாகும்.
 
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
 
ராகு பலன்கள்
 
ராகு ஆறாமிடத்தில் சஞ்சரிக்க ஆரம்பிக்கிறது. அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். வீடு, வாகனம் வாங்க கடன் வாங்க வேண்டியது வரும். தந்தையின் உடல்நலம் பாதிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக நடைபெறும். அரசியலில் நல்ல பதவி கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். 
 
கேது பலன்கள்
 
கேது 12மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. வரவை மிஞ்சின செலவுகள் உண்டாகும். இடமாற்றம் உண்டாகும். முதலீடுகளிலிருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. பிரயாணங்கள் நன்மையைத் தராது. மறைமுக எதிரிகளினால் சில தொல்லைகள் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். இளைய சகோதரர்களினால் செலவினங்களும் பிரச்சினைகளும் உண்டாகும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. பழைய வாகனத்தை நஷ்டத்திற்கு விற்க நேரிடும்.
 
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
 
ராகு பலன்கள்
 
ராகு 9-03-2019 முதல் 5மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. கடன்களை திரும்பச் செலுத்துவீர்கள். மன அமைதி குறைந்து காணப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினைகளைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்காது. சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்காது. ரேஸ், லாட்டரி தவிர்க்கவும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. கூட்டு வியாபாரம் ஓரளவுக்கு லாபத்தைத் தரும். உழைக்காத பணத்திற்கு வாய்ப்புண்டு.
 
கேது பலன்கள்
 
கேது லாபஸ்தனமாகிய 11மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. பல வகைகளில் பணவரவு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். வங்கியில் நிதி நிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவன், மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். 
 
பரிகாரம்: கால பைரவரை வழிபட்டு வர கவலைகள் தீரும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்து வர நன்மைகள் கிடைக்கும். 
 
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
 
ராகு பலன்கள்
 
ராகு 9-03-2019 முதல் 4மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்க வேண்டிய யோகம் உண்டாகும். பயிர்த் தொழில் சிறப்பாக நடைபெறும். திருமணம் நடைபெறும். வியாபாரத்தில் போட்டிகள் காணப்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிரயாணங்கள் மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். காதல் விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும்.  
 
கேது பலன்கள்
 
கேது 10மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். அரசியலில் பதவி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் நன்றாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். 
 
பரிகாரம்: ஆலங்குடி சென்று குருபகவானை தரிசித்து வந்தால் துன்பங்கள் அகலும்.
இராகு கேது பெயர்ச்சி பலன்கள் – தனுசு, மகரம், கும்பம், மீனம்  ராசிகளுக்கு..
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com
 
முதல் பகுதி
இராகு கேது பெயர்ச்சி பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கு..
பகுதி 2

From around the web