இராகு கேது பெயர்ச்சி பலன்கள் – சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு..

இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் – சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) ராகு பலன்கள் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கத் தொடங்குகிறது. பல வகைகளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு கல்விக்கு வாய்ப்பு உண்டாகும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மூத்த சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
 
இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் – சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
 
ராகு பலன்கள்
 
லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கத் தொடங்குகிறது. பல வகைகளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு கல்விக்கு வாய்ப்பு உண்டாகும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மூத்த சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 
 
கேது பலன்கள்
 
கேது 5மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் பிரச்சினைகள் உண்டாகும். காதல் விவகாரங்கள் மன அமைதியைக் கெடுக்கும். சிலருக்கு  குழந்தை பாக்கியம் கிடைக்கும். பங்குச் சந்தை லாபத்தைத் தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. சினிமாத் துறையினர் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
 
பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் சிவனை அர்ச்சித்து வர பிரச்சினைகள் தீரும்.
 
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அசுவதம், சித்திரை 1ம் பாதம்)
 
ராகு பலன்கள்
 
ராகு உங்கள் ராசிக்கு 10மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அரசியலில் பதவி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பொதுநலச் சேவைகள் செய்வீர்கள்.
 
கேது பலன்கள்
 
கேது 4மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. கல்வியில் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தாயாரின் உடல்நலம் சிறிது பாதிக்கப்படும். திருமணம் கைகூடும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும். பிரயாணங்கள் இனிமையாக அமையும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
 
பரிகாரம்: கால பைரவரை வழிபட்டு வாருங்கள். நல்லதே நடக்கும்.
 
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
 
ராகு பலன்கள்
 
ராகு 9மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகப் பிரயாணங்கள் ஏற்படும்.  தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். பணத்தை முதலீடு செய்ய வேண்டிய நேரமிது. பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். பழைய வீட்டை புதுப்பிக்க நேரிடும். ஒரு சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக நடைபெறும். 
 
கேது பலன்கள்
 
கேது 3மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இடமாற்றம் உண்டாகும். உடல் நலக்குறைவு உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை குறைந்து காணப்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வம்பு வழக்குகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அமைதி காக்க வேண்டும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள்.
 
பரிகாரம்: பராசக்தியை வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர நன்மைகள் பல நடைபெறும்.
 
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)
 
ராகு பலன்கள்
 
ராகு எட்டாமிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. மனக்கவலை அதிகரிக்கும். ஆப்பரேஷன், விபத்து பிரச்சினைக்கு வாய்ப்புண்டு. உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்களிடம் கவனமாக பழகாவிடில் பிரச்சினை வந்து சேரும். கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. சில ஆசைகள் நிறைவேறும். 
 
கேது பலன்கள்
 
கேது இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது.  பணவரவு தாராளமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலர் உத்தியோகத்திலிருந்து ஒய்வு பெறுவர். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். வங்கியில் பண இருப்பு உயரும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். 
 
பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் முருகப் பெருமானையும் துர்கா தேவியையும் வழிபட்டு வர வாழ்வு சிறப்பாக அமையும்.
 
தனுசு, மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கான பலன்கள் நாளை தொடரும்.  
 
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941 , abalasekar@hotmail.com
 

மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம்: 

From around the web