சோதிடப்படி மோடிக்கு வனவாசமா? அடுத்த பிரதமர் யார்? – எஸ்க்ளூசிவ்!

சென்னை: கருத்துக் கணிப்புகள் பாஜக அமோகமாக வெற்றி பெறும் என்று சொல்லும் வேளையில் ராகுல் காந்தி அதை நம்பவில்லை என்று கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கும் கருத்துக் கணிப்பு மீது நம்பிக்கை இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. சோதிடப்படி பிரதமர் மோடியின் ஜாதக பலன்களை ஜோதிட விஷாரத் அ.பாலசேகர் ஏற்கனவே வணக்கம் இந்தியா இணையத் தளத்திற்காக கணித்து இருந்தார். இவருக்கு இந்திய அளவில் உள்ள அரசியல்வாதிகளும், மலேசியா நாட்டு அரசியல்வாதிகளும் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். 2012 அமெரிக்க அதிபர் தேர்தலில்,
 

சோதிடப்படி மோடிக்கு வனவாசமா? அடுத்த பிரதமர் யார்? – எஸ்க்ளூசிவ்!சென்னை: கருத்துக் கணிப்புகள் பாஜக அமோகமாக வெற்றி பெறும் என்று சொல்லும் வேளையில் ராகுல் காந்தி அதை நம்பவில்லை என்று கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கும்  கருத்துக் கணிப்பு மீது நம்பிக்கை இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

சோதிடப்படி பிரதமர் மோடியின் ஜாதக பலன்களை ஜோதிட விஷாரத் அ.பாலசேகர் ஏற்கனவே வணக்கம் இந்தியா இணையத் தளத்திற்காக கணித்து இருந்தார். இவருக்கு இந்திய அளவில் உள்ள அரசியல்வாதிகளும், மலேசியா நாட்டு அரசியல்வாதிகளும் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். 

2012 அமெரிக்க அதிபர் தேர்தலில், ஒபாமாவை விட மிட் ராம்னி முன்னணியில் இருந்த போது, ஒபாமா நிச்சயம் மீண்டும் அதிபர் ஆவார் என்று உறுதியாகச் சொன்னவர் ஜோதிட விஷாரத் அ.பாலசேகர்.  அவர் சொன்னது போலவே, அடுத்தடுத்த நகர்வுகள் மிட் ராம்னிக்கு பின்னடைவாகவும் ஒபாமாவுக்கு சாதகமாகவும் திரும்பியது. மீண்டும் அதிபர் ஆனார் ஒபாமா.

கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கிறதே என்று அ.பாலசேகர் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது,

“பிரதமர் மோடிக்கு இரண்டு பிறந்த நேரங்களின் அடிப்படையில் ஜாதகங்கள் இருக்கின்றன. இவை இரண்டில் ஒன்று உண்மையாக இருந்தாலும், பிரதமர் மோடி மீண்டும் அதிபர் ஆவதற்கு வாய்ப்புகள் இல்லை. அவருக்கு வனவாசம் செல்ல வேண்டிய காலக் கட்டமாக உள்ளது.

எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது. கூட்டணி ஆட்சி தான் அமையும். ராகுல் காந்தியும் பிரதமர் ஆவதற்கு வாய்ப்பு கிடையாது. மற்ற தலைவர்களில் பார்த்தால் ப.சிதம்பரத்திற்கும், சந்திரபாபு நாயுடுக்கும் ஓரளவு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா இருவருக்கும் மீண்டும் பிரதமர் ஆகும் வாய்ப்புகளும் இல்லை. அடுத்த பிரதமர் புதிய பிரதமராகத்  தான் இருப்பார்,” என்று கூறினார்.

 

From around the web