கொரோனாவுக்கு பயப்படத் தேவையில்லை – ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)!

கொரோனா வைரஸை பொறுத்த மட்டில் பலவிதமான கருத்துக் கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் என்னுடைய ஜோதிட ரீதியான கணிப்பை கீழே தருகிறேன். கொரோனாவின் தாக்கம் எப்போது குறையும் என்பதற்காக K.P. முறையின் படி எண் 44 ஐ தெரிவு செய்து அதன் படி ஜாதகம் கணித்தேன். இதன் படி முதலாம் வீட்டின் உப நட்சத்திர அதிபதி சுக்கிரனாக வந்தது. லக்னம் மிதுனம். சுக்கிரன் 5, 12க்குரிய அதிபதி ஆகி 11வது வீட்டில் இருக்கிறது. எனவே இந்த நோய்
 

கொரோனாவுக்கு பயப்படத் தேவையில்லை – ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)!கொரோனா வைரஸை பொறுத்த மட்டில் பலவிதமான கருத்துக் கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் என்னுடைய ஜோதிட ரீதியான கணிப்பை கீழே தருகிறேன்.

கொரோனாவின் தாக்கம் எப்போது குறையும் என்பதற்காக K.P. முறையின் படி எண் 44 ஐ தெரிவு செய்து அதன் படி ஜாதகம் கணித்தேன். இதன் படி முதலாம் வீட்டின் உப நட்சத்திர அதிபதி சுக்கிரனாக வந்தது. லக்னம் மிதுனம்.

சுக்கிரன் 5, 12க்குரிய அதிபதி ஆகி 11வது வீட்டில் இருக்கிறது. எனவே இந்த  நோய்  கண்டிப்பாக நம்மை விட்டு  விலகி விடும். இந்த ஜாதக கணிப்பின் படி, செவ்வாய் திசை இருப்பு 0 வருடம் 2 மாதம் 10 நாள் என்று வந்தது. 

இதன்படி தற்போது செவ்வாய் திசை சந்திர புத்தி நடைபெறுகிறது. செவ்வாய் திசை முடிந்து, ராகு திசை ஆரம்பமாகும் போது, இந்த நோய் நம்மை விட்டுச் சென்று விடும். அதாவது, 11-6-2020 க்குப் பின் இதன் தாக்கம் சுத்தமாக இருக்காது. 

கோச்சாரப்படி பார்க்கும் போது, குரு அதிசாரத்தில் மார்ச் 29ம் தேதி மகரத்திற்குச் சென்றுள்ளது. இதன் பிறகு வைரஸின் தாக்கம் கொஞ்சம் குறைய வாய்ப்புண்டு. ஆனால், சனியும் செவ்வாயும் சேர்ந்து மே 4ம் தேதி வரை இருப்பதினால், இது படிப்படியாகத் தான் குறையும். 

மே 4ம் தேதிக்குப் பின், அதாவது  செவ்வாய் கும்பத்திற்குச் செல்லும் போது கொரோனா வைரஸின் வேகம் குறைந்து விடும்.

எனவே, எப்படிப் பார்த்தாலும் நாம் இந்த நோயின் பிடியிலிருந்து தப்புவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஜூன் 11ம் தேதிக்குப் பிறகு கொரோனா வைரஸ் பிடியிலிருந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி விடுவோம். எல்லாம் வல்ல இறைவன் நம்மை காத்தருள்வாராக.

– ஜோதிட விஷாரத்.அ.பாலசேகர் எம்.எஸ்.சி (ஜோதிடம்)

கொரோனாவுக்கு பயப்படத் தேவையில்லை – ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)!

From around the web