‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்!

டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சீன நிறுவனத்தின் மொபைல் ஆப் “டிக் டொக்” ஐ தடை செய்யக் கோரி மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. அந்த தீர்ப்பு மீது உச்சநீதிமன்றத்தில் கூகுள் நிறுவனத்தின் இந்திய அலுவலகம் மேல் முறையீடு செய்திருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றுங்கள் என்று அரசு அறிவுறுத்திய நிலையில் கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் “டிக் டொக்” மொபைல் ஆப் –
 
‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்!டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சீன நிறுவனத்தின் மொபைல் ஆப் “டிக் டொக்” ஐ தடை செய்யக் கோரி மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. அந்த தீர்ப்பு மீது உச்சநீதிமன்றத்தில் கூகுள் நிறுவனத்தின் இந்திய அலுவலகம் மேல் முறையீடு செய்திருந்தது.
 
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றுங்கள் என்று அரசு அறிவுறுத்திய நிலையில் கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள்  “டிக் டொக்” மொபைல் ஆப் – ஐ நீக்கியுள்ளார்கள். 
 
இந்தியாவிலிருந்து கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் “டிக் டொக்” தரவிறக்கம் செய்ய முடியாது. டிக் டொக் மூலம் பெரும் கலாச்சார சீரழிவு ஏற்படுவதுடன், சிறுவர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொது நல வழக்கு தொடரப் பட்டிருந்தது.
 
– வணக்கம் இந்தியா

From around the web