சுற்றுச்சூழல் சட்ட திருத்த வரைவு! கிராம மக்களுக்கு புரிய வேண்டாமா? உச்ச நீதிமன்றம் சுளீர்!!

வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெருமை மிக்க நாடு இந்தியா. இனம்,மொழி,கலாச்சாரம் இவற்றில் வேறுபாடு இருந்தாலும் இந்தியன் என்பதில் ஒரேகுடையின் கீழ் நிற்பவர்கள். வடகிழக்கு அருணாச்சல மாநிலத்தவரும் வடமேற்கு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தவரும் லட்சத்தீவு டையூ டாமன் மக்களும் இந்தியன் எனும் இழையால் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் ஆட்சிமொழி என்ற இடத்துக்கு வரும்போது நெருடல் உரசல் தோன்றிவிடுகிறது. போதனா மொழி, நீதிமன்றவழக்காடு மொழி, ஆட்சிமொழி இவை பாமர மக்களுக்கு புரிவதில்லை. மின் கட்டணம் போன்ற அரசுத்துறை கேட்பு நோட்டிஸ்கள் கேரளாவிலும்
 

சுற்றுச்சூழல் சட்ட திருத்த வரைவு! கிராம மக்களுக்கு புரிய வேண்டாமா? உச்ச நீதிமன்றம் சுளீர்!!வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெருமை மிக்க நாடு இந்தியா. இனம்,மொழி,கலாச்சாரம் இவற்றில் வேறுபாடு இருந்தாலும் இந்தியன் என்பதில் ஒரேகுடையின் கீழ் நிற்பவர்கள்.  வடகிழக்கு அருணாச்சல மாநிலத்தவரும்  வடமேற்கு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தவரும்  லட்சத்தீவு டையூ டாமன் மக்களும் இந்தியன் எனும் இழையால் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் ஆட்சிமொழி என்ற இடத்துக்கு வரும்போது நெருடல் உரசல் தோன்றிவிடுகிறது.  போதனா மொழி, நீதிமன்றவழக்காடு மொழி, ஆட்சிமொழி இவை பாமர மக்களுக்கு  புரிவதில்லை. மின் கட்டணம் போன்ற அரசுத்துறை கேட்பு நோட்டிஸ்கள்  கேரளாவிலும் கர்நாடகாவிலும்  அந்த மாநில மொழியில் தான் உள்ளன.

இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே அரசு அலுவல் மொழி என்ற ஆட்சிமொழி சட்டம் 1963 ஐ  மாநில மொழிகளையும் சேர்த்து திருத்தம் செய்ய மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி  ஷரத்  ஏ பாப்டே  கூறியுள்ளார்.

இந்தநாளில் நீங்களும் கூகுளும் மொழிமாற்றம் செய்துகொள்வது எளிது.  பார்லிமென்டில் எந்த மொழியும் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. நாங்களும் தீர்ப்புகளை மாநிலமொழிகளில்  மொழிமாற்றம் செய்துவருகிறோம். மத்திய அரசும் சட்டத்தை காலத்துக்கு ஏற்ப மாற்றவேண்டும்.என்று  நீதிபதி யோசனை தெரிவித்தார். 

மொழிமாற்றம் எம்பிராய்டரி துணியின் பின்புறம் போலிருக்கும் என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டின்  வசனத்தை ,சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா  மேற்கோள் காட்டினார்.  மேற்கோள் மொழிபெயர்ப்பு தானே என்று  நீதிபதி பதிலடி தந்ததார்.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் திட்ட வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து விளம்பர படுத்தவேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் ஜூன் 30 அன்று உத்தரவிட்டது. அது தொடர்பான முறையீட்டின்மீது உச்சநீதிமன்றம் மேற்கண்டவாறு மத்திய அரசை அறிவுறுத்தியது.

இந்தியாவின் எல்லா பகுதிமக்களும் கிராமவாசிகள் பாமரர் களும் இந்த சுற்றுச்சூழல் திட்ட வரைவு அறிக்கையை படித்து தங்கள் கருத்து ஆட்சேபம் தெரிவிக்க வாய்ப்பு வேண்டும் என்ற நீதிமன்றம் கோடிட்டுள்ளது .

சுற்றுச்சூழல் திட்ட வரைவு அறிக்கை விஷயத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்ற ஆலோசனையை பின்பற்றவேண்டும். அரசுஅலுவல் மொழி பற்றியும் சாத்தியங்களை மனப்பூர்வமாக ஆய்வு  செய்ய வேண்டும்.

– வி.எச்.கே.ஹரிஹரன்

A1TamilNews.com

From around the web